skip to main |
skip to sidebar
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடுக் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த கட்டுரையில் நாம் சந்தேகித்து இருந்தபடியே முக்கிய பெண் புரோக்கர் ஒருவரை வளைத்திருக்கிறது போலீஸ். அதிகாலை மூன்று மணிவாக்கில் ராமஜெயம் வெளியே கிளம்பிப் போனதை உறுதி செய்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் அதுகுறித்து ராமஜெயம் மனைவி லதாவிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர் விளக்கமாகப் பேச மறுக்க, நேருவிடமும் விசாரணையை நெருக்கியது போலீஸ். அதன் விளைவாக இப்போது சந்தேகத்துக்கு இடமான மூன்று பேர் போலீஸ் வளையத்தில் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள். அதிகாலை மூன்று மணிக்கு ராமஜெயத்தின் பிரத்யேக செல் நம்பருக்கு கால் செய்த விவரத்தை வைத்து இந்த மூன்று பேரையும் துருவி எடுக்கிறார்கள் தனிப்படை அதிகாரிகள்.கிட்டத்தட்ட கொலையாளிகளை வளைத்துவிட்ட போலீஸ், மேலிடத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்பி ஓகே பெற்ற பிறகே மீடியாக்களிடம் அறிவிக்க இருக்கிறது.
+ comments + 1 comments
திருச்சியில் உள்ள போலீஸ் சோர்ஸ் சிலரிடம் பேசினேன். கும்பலில் வந்திருக்கும் செய்திகள் எந்தளவுக்கு நுணுக்கமானவை என்பது அப்போது தான் புரிந்தது. தற்போது சிலரை போலீஸ் தன்வசப்படுத்தி இருப்பதும் உண்மை. ராமஜெயம் பெண் சம்பந்தமான பிரச்சனையாலேயே கொலை செய்யப்பட்டார் என்பதும் உண்மை. ஹாட்ஸ் ஆப் கும்பல்!
Post a Comment