மத்திய அரசின் 59 - வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது பலருடைய எதிர்பார்ப்புக்கும் தக்கபடி வாகை சூடவா படத்துக்குக் கிடைத்திருக்கிறது.
மிக உன்னதமான படைப்பாக வெளியான இந்தப் படத்துக்கு வசூல் ரீதியான ஆதரவோ, மீடியாக்களின் பாராட்டோ கிடைக்கவில்லை.
(சில மீடியாக்கள் தவிர...) அந்த மனக்குறைகளுக்கு மருந்தாக தேசிய விருது அறிவிப்பு படத்தின் இயக்குனர் சற்குணம், தயாரிப்பாளர் முருகானந்தம் இருவரையும் மகிழ்ச்சியில் துள்ள வைத்திருக்கிறது.
பன்னாட்டுத் தமிழர்களின் சார்பாக நம் 'கும்பல்' இணையதளம் 'வாகை சூடவா' குழுவை மனமார வாழ்த்துகிறது.

சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது 'அழகர்சாமியின் குதிரை' படத்துக்கும், அப்படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளன.
மிகுந்த ஆறுதலாக சிறந்த படத்தொகுப்புக்கான விருது 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு கிடைத்திருக்கிறது. தமிழின் தரம் மிகுந்த படைப்புகளைப் பதிவு செய்த அத்தனை படைப்பாளர்களையும் 'கும்பல்' வாழ்த்தி மகிழ்கிறது.




+ comments + 2 comments
தலைப்பே சூப்பர்! தமிழர்கள் மென்மேலும் சாதிக்கட்டும்!
congrats sargunam!
Post a Comment