சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு புதிய குஷியோடு கமென்ட் மழை பொழிகிறார் நம்ம சீனியர் சிட்டிசன்... என்ன ஒரு வருத்தம்னா... கேப்டன் மேல நம்ம குரங்காருக்கு அப்புடி என்னதான் கோபமோ... ஒவ்வொரு தடவையும் உறுகா மாதிரி கேப்டனையே தொட்டுக்கிறார்...
ஐந்து மாநிலத் தேர்தல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம்!
- ராகுல் காந்தி
''ஓலை வீட்டுல கூழ் குடிக்கக் கூடாதுன்னா?"
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே எங்களின் ஆதரவு!
- ஏ.சி.சண்முகம்
''எலெக்சன் நேரத்துல மட்டும் மனுஷன் எங்கேர்ந்துதான் கெளம்பி வாராரோ..."
ரஜினிகாந்த் என்கிற பெயரில் இருக்கிற 'காந்த்' என்கிற வார்த்தையைக் காப்பி அடித்துதான் தே.மு.தி.க. தலைவர், விஜயராஜ் என்கிற பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார்!
- நடிகர் ராமராஜன்
''என்னடா இவரோட பெரிய ரோதனையா போச்சு... ஒண்ணு காப்பி அடிக்கிறாரு... இல்லன்னா, வேட்பாளரை அடிக்கிறாரு!"
இலவசங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள்!
- விஜயகாந்த்
''கப்பைக் கழுவி காய வைக்க அண்ணன் ஆள் தேடுறாரு பாரு..."
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்களிக்க முடியாது!
- தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்
''அட சும்மா இருங்க சார்... அவனவன் உயிரே இல்லாம ஓட்டுப் போட்டுக்கிட்டு இருக்கானுக!"
சிமென்ட் மீதான சரக்கு கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்!
- எம்.ஏ .எம்.முத்தையா
''ஏதோ நம்ம டாபிக்கா இருக்கேன்னு கேப்டனும் கிளம்பிடப் போறாரு..."
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெற்றி பெற வைக்க பசுமைத் தாயகம் போராடும்!
- டாக்டர் ராமதாஸ்
''ஏம்பா... டாக்டருக்கு என்னப்பா ஆச்சு? சி.பி.ஐ. என்கொயரிக்கு போயிட்டு வந்ததில் இருந்து இப்புடித்தான் எதை எதையோ உளறிக்கிட்டு இருக்கார்!"








+ comments + 2 comments
குரங்கார் கலக்குறார்... அனைத்து அரசியல்வாதிகளையும் கலாய்க்காமல் விஜயகாந்தை மட்டும் இப்படி வெளுத்து வாங்குவது ஏன்? குரங்காருக்கு குட்டு வையுங்க!
monkey sevai vaaram orumurai thevai... kalakkal thotarattum!
Post a Comment