Latest Movie :

சோனியா... சோனியா... போனியா... போனியா...




ம்மட்டி அடிகொடுத்து இருக்கிறது ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவு! மத்திய அரசைக் கையில் வைத்திருக்கும் தைரியத்தில் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் தொடங்கி ஐந்து மாநிலங்களையும் அபரிதமாக செய்தது விடலாம் என கனவு கண்டது சோனியா அரசு. 'எங்களின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது' எனக் கொக்கரித்தார் சோனியாவின் வாரிசு ராகுல் காந்தி. கிராமங்கள் தோறும் பயணப்பட்டார். ஏழைப்பங்காளனாக தன்னைக் காட்டிக் கொண்டார். குடிசைகளில் நுழைந்து கூழ் குடித்தார். 'அடுத்த பிரதமருக்கான அத்தனை தகுதியும் ராகுலுக்கு வந்துவிட்டது' என சொக்கிப் போனார் சோனியா அம்மையார். அதனாலேயே உ.பி. சட்டமன்றத் தேர்தலை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்கொண்டார். தேர்தல் முடிவோ... அம்மையாரை ரொம்பவே நோகடித்துவிட்டது.


முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 226 இடங்களைப் பிடித்து மிரள வைத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கும் இடங்கள் எத்தனை தெரியுமா? வெறும் 38 . காங்கிரசின் ஆட்சியைப் பிடிக்கிற கனவு தகர்ந்து விட்டதே என்பதல்ல சோனியாவின் வேதனை. தன் மகனின் அரசியல் எதிர்காலம் இப்படி புஸ்வாணமாகி விட்டதே என்பதே அந்த பெற்ற வயிற்றின் தவிப்பு.


தற்போது பிரதமராக இருக்கும் மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சரியான இணக்கம் இல்லை. இடையிலேயே எப்படியாவது ராகுலை பிரதமராக்கிவிட வேண்டும் எனத் துடித்தார் சோனியா. ஆனால், அதனை அவ்வளவு சுலபத்தில் நிகழ்த்திவிட முடியவில்லை. அதனால்தான், உ.பி. தேர்தல் களத்தில் ராகுலை இந்தளவுக்குத் தீவிரமாகக் களமிறக்கிவிட்டார். நிச்சயம் தன் மகன் சாதிப்பான்; அப்பனின் பெயரை நிலைநாட்டி, அடுத்த பிரதமருக்கான தகுதியாளனாக வலம் வருவான் என நம்பினார் சோனியா.




ஆனால், அக்கிரமக்கார அதிபதிகளின் கனவு அவ்வளவு சீக்கிரத்தில் பலித்திடுமா என்ன? உ.பி. மட்டுமல்ல... பஞ்சாப், கோவா என பந்தாடப்பட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இப்படியொரு சம்மட்டி அடியை சோனியா எதிர்பார்த்திருக்க மாட்டார்.


தமிழ்நாட்டைப் போலவே இளிச்சவாய் கூட்டணிக் கட்சிகளும், எதையும் சொரணையோடு பார்க்காத தலைவர்களும் எல்லா மாநிலத்திலும் இருப்பார்களா என்ன? கூட்டணி அமைக்க சோனியா எப்படிஎல்லாம் தடுமாறினார், அவருடைய அக்கப்போரை எல்லாம் மீறி தனித்த அந்தஸ்தை மாநிலக் கட்சிகள் எப்படி நிலைநாட்டி இருக்கின்றன என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவு சரியான உதாரணம்.


ஈழமே சுடுகாடாக வீழ்த்தப்பட்ட போதும் காங்கிரசின் காலில் வீழ்ந்து கிடந்த கருணாநிதி இப்போதுதான் நினைத்துப் பார்ப்பார். 'இந்திராவையே எதிர்த்து அரசியல் செய்த நாம் இன்றைக்கு சோனியாவிடம் சுருண்டு போனோமே... ஆனால், மற்ற மாநிலங்கள் சோனியாவை சுண்டைக்காயாக சுருட்டி வீசிவிட்டனவே...' என கருணாநிதியின் மனம் இப்போதுதான் உண்மையை உணரும்.


அதேசமயம், தமிழர்களின் ரத்தம் குடித்த ராகுல் இன்றைக்கு ரத்தம் உறைந்து போய்க் கிடக்கிறார். தமிழர்களின் சாபம் சோனியாவை அடியோடு வீழ்த்தி அலற வைத்திருக்கிறது.இது ஆரம்பம்தான்... ஈழத் தமிழர்களின் வாழ்வைக் குருவிக்கூடு போல சிதைத்துப் போட்டவர்கள் எப்படி எல்லாம் சிதையப் போகிறார்கள் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயம் தெளிவுபடுத்தும்!
Share this article :

+ comments + 4 comments

இந்த கேடுகெட்ட அரக்க அரசு நிச்சயமாக அழியும் நாள் வரும். எங்கள் வாரிசுகள் எப்படி அழிந்தார்களோ... அதேபோல் சோனியாவின் வாரிசுகள் நிம்மதி கெட்டு அலைவார்கள். கடவுள் இல்லாவிட்டாலும், காலம் இவர்களை நிச்சயம் தண்டிக்கும். அந்தப் பொன்னாளை பார்க்க தமிழர்களே தயாராக இருங்கள்.

6 March 2012 at 23:28

SONIYAVUKKUM RAHULUKKUM NAM THAAITHTHAMIZH URAVUKAl KOTUKKUM ATI THAAN MARAKKA MUTIYAATHATHAAKA IRUKKUM. ATHARKU AAYATHTHAM AAVOM THAMIZHARKALE...

7 March 2012 at 02:03

சோனியா... இனி நீ சோமாலியா...
ராகுல்... இனி நீ ரசகுல்...
பிரியங்கா... இனி நீ வெறும்தேங்கா...

ராஜீவ் காந்தியின் கொலைக்காக ஈழத் தமிழர்களைப் பழிவாங்கிய பாவிகள் இன்றைக்கு நிரந்தரப் பழிகாரர்களாக மாறிவிட்டார்கள். எந்த மாநிலத்து தோல்வியும் அவர்களுக்கு வலிக்காது. 40 தொகுதிகளிலும் தமிழர்கள் அடிக்கும் அடிதான் அவர்களுக்கு சமாதி கட்டும்.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger