சீமான் - தீரன் பிரிந்தது ஏன்?
நாம் தமிழர் கட்சியை சீமான் ஆரம்பித்த போது பல இயக்கங்களில் இருந்தும் அவரிடத்தில் வந்து நிறைய பேர் சேர்ந்தார்கள். சிலரை அடையாளம் கண்டு சீமானே தவிர்த்தார். சிலரை அவரே கைகொடுத்து வரவேற்றார். அதில், முக்கியமானவர் தீரன். பா.ம.க.வில் இருந்து பிரிந்து தனித்து இருந்த தீரன் நாம் தமிழர் இயக்க மேடைகளில் முழங்கத் தொடங்கினார். முக்கியமான அறிக்கைகளைத் தயார் செய்து கொடுக்கும் வேலையையும் செய்தார்.
இடையில், அவருக்கும் சீமானுக்கும் என்ன கசப்பு ஏற்பட்டதோ... வேல்முருகன் புது இயக்கம் தொடங்க போகும் விஷயம் தெரிந்து அதில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார் தீரன். அதோடு விட்டிருந்தால் தேவலாம். ஆனால், சீமானுக்கு எதிராக பேசவும் தீரன் தீவிரமாக, இதற்கு பதிலடி கொடுக்க நாம் தமிழர் இயக்கமும் தயாராகி விட்டது.
''நாம் தமிழர் இயக்கம் ஐயா தீரனுக்கானது அல்ல... அவருடைய பேரனுக்கானது!" என பதிலடி கொடுத்திருக்கிறார் சீமான். அடுத்தபடியாய் தீரன் ஏதாவது பேசினால் அதற்கு மிகக் கடுமையான பதில்கள் இருக்கும் என்பதை சீமானின் தம்பிகள் உரத்து சொல்லி வருகிறார்கள். இந்த மோதல் சீமானுக்கும் வேல்முருகனுக்குமான மோதலாக உருவெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
- kumbal

+ comments + 1 comments
தீரன் பிரிந்தது தான் நாம் தமிழருக்கு நல்லது. பழைய தகர
டப்பாவாகக் கிடந்த தீரனை மேடைகளில் முன்னிறுத்தியதே சீமான்
செய்த தவறு. அதன் விளைவை இன்றைக்கு அனுபவிக்கிறார் சீமான்.
இன்னும் சில வருடங்களில் வேல்முருகனும் இதே விளைவை
அனுபவிப்பார். சீமானை விட்டு அடுத்து விலகப்போகும் ஆளாக
தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் கலைக்கோட்டு உதயத்தைப்
பற்றிச் சொல்கிறார்கள். சீமானுக்கு அருகே அவரை பயங்கரமாகப்
புகழ்ந்து பேசும் உதயம், வெளியே அவரை படுகேவலமாக திட்டித்
தீர்க்கிறாராம். இந்த மாதிரியான ஆட்களுக்கு அடையாளம் கொடுத்து
வைத்திருக்கும் சீமான், விரைவிலேயே இவர்களைக் களையெடுக்க
வேண்டும். உண்மையான இளைஞர்கள் மட்டுமே சீமானின் கட்சிக்குப்
போதும்!
Post a Comment