அம்மா அடுத்த அதிரடி!
வழக்கம்போலவே அடுத்த மாற்றமும் நடந்து இருக்கிறது... அமைச்சர் பதவியிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி இருவரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய அமைச்சர்களாக திருச்சி சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்த அதிரடியாக சசிகலாவின் உறவு வட்டாரம் மீது உக்கிரத்தைக் காட்டி இருக்கிறார் ஜெயலலிதா. எம்.நடராஜனின் அக்கா வைஜெயந்தி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், அவருடைய மனைவி, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவு வெளியாகி இருக்கிறது.
கோவை ராவணனுக்கு நெருக்கமான வேலுமணியின் மாவட்ட செயலாளர் பதவியும் அதிரடியாகப் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சசிகலாவின் தம்பி திவாகரனை விரட்டிப் பிடிக்கும் வேலைகளும் ஏக தீவிரத்தில் நடந்த வண்ணம் இருக்கிறது.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை பொறுப்பும் சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு, பூங்குன்றனும், மருதுராஜ் என்பவரும் நிர்வாகத்துக்கு நியமிக்கப்பட்ட இருக்கிறார்கள்.இதில், உச்சபட்சமாக நடக்க இருக்கும் அதிரடியாக உளவுப்புள்ளிகள் சொல்லும் விசயம்தான் கண்ணைக் கட்டுகிறது. திவாகரன், ராவணன் இருவரையும் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போலீசார் முதல்வருக்கு அவர்கள் இருவரையும் பற்றிய கம்ப்ளீட் ரிப்போர்டை கொடுத்து இருக்கிறார்களாம். 'நீங்களாக வந்து சரணடையுங்கள்... இல்லையேல் சசிகலாவையே அரெஸ்ட் செய்ய வேண்டி இருக்கும்' என சசிகலாவின் சொந்தங்களிடம் இப்போது சொல்ல ஆரம்பித்து இருக்கிறது போலீஸ். சசிகலா மீது கைவைக்கவும் போலீசுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டாராம் முதல்வர்.
அடுத்தடுத்த அதிரடிகள் தமிழ்நாட்டையே கதிகலங்க அடிக்கும் என உறுதியாக சொல்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் சிலர். பொறுமையின் எல்லை கடந்து அமைதி காக்கும் மன்னார்குடி உறவுக்காரர்கள் பதிலடியாக ஏதும் செய்வார்களா? இல்லை, பம்மியபடியே அமைதி காப்பார்களா? என்பதுதான் அரசியல் அரங்கின் புதிரான கேள்வி!
-கும்பல்
Labels:
jayalaஜெயலலிதா,
kumbal,
sasikala,
கும்பல்litha,
சசிகலா,
தமிழகம்




+ comments + 4 comments
அம்மா, உங்க ஆக் ஷன் சூப்பர்... சசிகலா உறவுக்காரங்களை துடைச்சு எறிந்த உங்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது நிச்சயம் கிடைக்கும் பாருங்க!
அம்மாவின் ஆட்சியெல்லாம் அம்சமாகத்தான் இருக்கிறது... ஆனால் இந்த அதிரடி வேலைகள் எல்லாம் எத்தனை நாட்கள் வரை என்று பார்போம்... "வேண்டும் என்றால் கூடி கும்மாளமாக கூத்தடிப்பது,, வேண்டாம்னா வேர் வேரருக்கரதுமே" இந்த அம்மா வோட வேலையா போச்சு...
என்னது, அடுத்த கைது சசிகலாவா? நம்புற மாதிரி இல்லியே
தலைவா... எனக்கென்னமோ, இந்த கைதுகளை எல்லாம் நடத்த
சொல்றதே சசிகலாவாதான் இருக்கும் போலருக்கு. எப்படியோ,
நல்லது நடந்தா சரி.
Amma is always stubborn lady. Terror to everyone who is going against her. We need this kind of lady in centre govt also.
Post a Comment