கட்சிக்காகவே கனிமொழி துயரங்களை தாங்கினார்: ராஜாத்தி அம்மாள்
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கட்சிக்காகவே கனிமொழி துயரங்களைத் தாங்கிக் கொண்டார் என்று திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிறந்த நாள் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ராஜாத்தி அம்மாள் பேசியது:
எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையே இந்த விழா நடைபெற்றுள்ளது. கனிமொழி கலைஞர் டிவி அலுவலகத்துக்குச் சென்றதில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்துக்கும் சென்றதில்லை. அலைக்கற்றை தொடர்பாக அவருக்கு எதுவும் தெரியாது.
அலைக்கற்றை வழக்கில் சிக்கி பல்வேறு துயரங்களை அவர் சந்தித்து வருகிறார்.
திஹார் சிறையில் கனிமொழிக்கு டேபிள், சேர் கிடையாது. படுக்கப் பாய் கிடையாது. அவர் இருந்த அறையில் பூச்சிகள் இருந்தன. ஒரு முறை நான் சென்று பார்த்தபோது, பூச்சி கடித்து அவரது உடம்பில் பல இடங்களில் தடித்து இருந்தது.
இத்தனை துயரங்களையும் கட்சிக்காகவும், உறவுக்காகவும்தான் அவர் தாங்கிக் கொண்டார் என்றார் ராஜாத்தி அம்மாள்.
விழாவில் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை பேசும்போது, ""கட்சியில் கனிமொழிக்கு பதவி அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு'' என்றார்.
திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கைசிவம், மாநில மகளிரணி துணைத் தலைவர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Labels:
2gspectrum,
Daily thanthi,
dhayanithimaran,
Dinakaran,
kanimozhi,
karunanithi,
stalin

+ comments + 1 comments
thank u sir,congrauts....v encouraged u for work a lot 2 for the students commiteee....
Post a Comment