பிறந்த நாளன்று நீதிமன்றத்தில் கனிமொழி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தனது 44-வது பிறந்தநாளான வியாழக்கிழமையன்று பெரும்பாலான நேரத்தை நீதிமன்றத்திலேயே கழிக்க நேர்ந்தது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, அந்த வழக்கு விசாரணை தொடர்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மாலையில் வீடு திரும்பிய கனிமொழி தனது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
ஆண்டுதோறும் தனது பிறந்த நாளன்று தந்தை கருணாநிதியை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெறுவது வழக்கம்.
வியாழன் காலையில் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். தன்னை நேரில் சந்தித்து கனிமொழி வாழ்த்துப் பெறவில்லையே என்று அப்போது கருணாநிதி வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள், சகோதரர்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கனிமொழிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக, தி.மு.க. நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, ஹெலன் டேவிட்சன் எம்.பி. ஆகியோர் தில்லியில்
கனிமொழி வீட்டுக்குக் காலையில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஷாஹித் உஸ்மான் பல்வா ஆகியோர் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Labels:
2gspectrum,
Daily thanthi,
Dinakaran,
Dinamani,
kanimozhi

Post a Comment