Latest Movie :

காட்டிக் கொடுத்தவனுக்கு ஒரு கடிதம்!


கருணா,
உன் பெயர் சொல்லவே வாய் கூசுகிறது. ஆனாலும், எங்கள் முன்னாள் முதல்வரின் பெயரைச் சொல்லி சொல்லியே சூடு சொரணை வரண்டு போன ஜென்மமாக உன் பெயரை உச்சரிக்கிறோம். நலமாக இருக்கிறாயா? உன் நலத்துக்கு எந்த குறைச்சலும் இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். காட்டிக் கொடுத்தவர்கள் வரலாறு சில காலம் சுபிட்சமாகத்தானே இருக்கும். அதே வழிவந்தவந்தானே நீயும்... அதனால் சுகங்களுக்கோ, நலங்களுக்கோ உனக்கு குறைவு இருக்காது. ஆனாலும், தமிழர் நெறி என்பதால் உன் நலனை விசாரிக்கிறோம்.


என்னதான் இருந்தாலும் எங்களுக்காக ஒரு காலத்தில் துப்பாக்கி ஏந்தியவன் நீ. தலைவனின் தளபதியாக களத்தில் நின்றவன்; களமாடி வென்றவன். கருத்து வேறுபாடு என்பது எல்லா இடங்களிலும் இருப்பதுதான். முட்டாள்களின் கூடாரங்களிலும் அது இருக்கும். அறிவாளிகளின் இருப்பிடங்களிலும் அது இருக்கும். இதிகாச காலத்திலும் எதிர்க்கருத்து இருந்திருக்கிறது. தலைவனின் கருத்தோடு ஒத்துப்போகாமல், அவர் கட்டளைக்கு உடன்படாமல் வீம்புக்கு வெளியே வந்தவன் நீ.


எத்தனையோ பேர் பிரிந்த இயக்கம்தான்... எத்தனையோ பேர் வீழ்த்தத் துடித்த இயக்கம்தான்... எத்தனையோ பேர் இழித்துரைத்த இயக்கம்தான். ஆனால், நீ பிரிந்த போது தலைவனுக்கு எதிராகவே சிறு முணுமுணுப்பு எழுந்தது. 'கருணாவை விட்டிருக்க கூடாது' எனக் கசிந்துருகினார்கள் பலர். 'பிரபாகரனின் அவசரக்குடுக்கைத்தனம்' என கண்டித்தார்கள் பலர். ஆனால், எதற்கும் எம்தலைவன் பதில் சொல்லவில்லை. அவன் எந்த காலத்தில் பதில் சொல்லி இருக்கிறான்? அவன் பதில் சொல்கிற அளவுக்கு கேட்பவர்களுக்கு தகுதி இல்லை.


'பிரபாகரன் என்னை கொலை செய்ய முயன்றார்... என் ஆதரவு புலிகளை நூற்றுக்கணக்கில் கொலை செய்ய வைத்தார்' என விலகலுக்கு காரணம் சொன்னாய் நீ. சிங்கள அரசின் கைப்பாவையாகித்தான் நீ பிரிந்தாய் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஆனால், நீ கடைவிரித்த பொய்களை நம்பவும் இந்தப் பூமியில் ஆள் இருந்தார்கள்.


ஈழத்தில் போர் தீவிரம் எடுத்த நேரம். புலிகள் தட்டுத் தடுமாறி ஒவ்வொரு பகுதியாக இழந்த நேரம். உலகளாவிய கருணைக்காக ஒவ்வொரு தமிழ் உயிரும் தவித்துக் கிடந்த நேரம். ஏதாவது ஒரு நாடாவது இழத்துக்காக குரல் கொடுக்காதா என தொப்புள் கொடி உறவுகள் துடித்த நேரம். நீ என்ன செய்தாய் என்பது உனக்கு நினைவு இருக்கிறதா?

'பிரபாகரன் ஒரு கொடுரன். தமிழ் மக்களைக் காப்பாற்றும் எண்ணம் அவருக்கு இல்லை. இத்தனை உயிர்கள் சாக அவர்தான் காரணம். மக்களை பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டு புலிகளை அவர் போரிட வைக்கிறார். இத்தனை உயிர்களின் இறப்புக்கு அவர்தான் காரணம்' என தமிழக பத்திரிகைகளுக்கு பெட்டி ஸாரி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தாய். அதுவும் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக...


தமிழகத்தில் ஈழ ஆதரவு குரல்கள் எழும்பிவிடக் கூடாது... என்பதற்காக திட்டமிட்டு நீ கொடுத்த பேட்டி அது. ஆனால், அதை நான் வாசித்த இடம் எது தெரியுமா? மாவீரர்களுக்கு நிகராக உயிரை தீயாக்கி மடிந்தானே... என் தம்பி முத்துக்குமார். அவனுடைய இறுதி ஊர்வலத்தில். முத்துக்குமாரின் சுவாலையில் உன் பசப்பு நாடகம் பொசுங்கிப் போனது. ஒருமித்த தமிழர் தன்னெழுச்சி உன்னையும், உனக்கு ஆதரவாக பேனா பிடித்தவர்களையும் பிடரியில் அறைந்தது.


என்ன எழுச்சி ஏற்பட்டும் என்ன புண்ணியம்... இங்கே பொசுங்கிச் செத்தார்கள்... அங்கே போராடி செத்தார்கள். ஈழத்தின் இழவு எல்லோருடைய கண்பார்க்கவே ஈடேறி முடிந்தது. இறுதிக்கணம் வரை இழத்தை விட்டு வெளியேறாது இறுதிப்போர் புரிந்த தலைவன் சடலமாகக் காட்டப்பட்டான்.

தவறியும் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், நீதான் அந்தத் தகையாலனின் முகத்தை அடையாளம் காட்டிநாய்!


உலகத் தமிழினமே உறைந்து கிடந்த வேளையில், 'நான் சொன்னதை பிரபாகரன் கேட்டிருந்தால் இப்படி மடிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தமிழ் மக்களும் சீரழிந்து செத்திருக்க மாட்டார்கள்' என வியாக்கியானம் பாடிநாய்!

புலிகள் இனி புறப்படவே மாட்டார்கள் என எண்ணி தமிழர்களின் தலைவனாக கொக்கரிக்கத் தொடங்கிநாய்! மீள் குடியேற்ற அமைச்சராக மகுடம் சூட்டிக்கொண்டாய். மமதை மிகு தலைவனாக இன்றைக்கும் வளம் வருகிறாய்.


புத்தாண்டு தினத்திலும் தமிழர்களை எண்ணி நீ தத்தளித்து அழுத கோலத்தை இப்போதுதான் பார்க்கிறேன்.


கட்டிப் பிடிப்பதும், நெட்டி முறிப்பதும் உன் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால், எம்தலைவனின் தகைசார்ந்த தகுதிகளை நினைத்து பார்க்கிறேன். கற்பில், கண்ணியத்தில், பெண்ணை மதிக்கும் பெருங் குணத்தில் அந்தத் தலைவனை மிஞ்ச எவனுக்கேனும் தகுதி உண்டா இந்த மண்ணில்?


ஆயிரம் பழி சொன்ன நாயே... என் தலைவனின் விழி பார்க்க உனக்கு தைரியம் உண்டா? சூரியனைக் குறித்த நாயாக பெண்பித்துப் பிடித்த நீ எம் தலைவனை இழிபாடி இருக்கிறாய். அடி... இன்னும் என்ன கூத்து வேண்டுமானாலும் அடி... வாங்கித் திங்கும் நாயாகவே கழியட்டும் உன் வாழ்க்கை. உன் ஒவ்வொரு கூத்து அம்பலமாகும் போதும் என் தலைவனின் மீதான உண்மை இந்த உலகுக்குப் புரியும்.
அதுபோதும் எங்களுக்கு!

- KUMBAL
Share this article :

+ comments + 6 comments

25 January 2012 at 19:43

துரோகிகளை காலம் வீழ்த்தும் நிச்சயம்
ஆனால் இந்தகருணா நாய் கொடுமைகளை அனுபவித்தே அழிய வேண்டும்

நல்ல கட்டுரை... சில தினங்களாகத்தான் உங்களுடைய கும்பல் பகுதியைப் படிக்கிறேன். ஈழ ஆதரவு நிலைப்பாடு
மட்டுமல்லாது, பொதுவான அரசியலையும் புட்டுப் புட்டு வைக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை...

19 February 2012 at 05:45

idhu pondra dhrohihalai marakkaamal gnabagam vaithukkollungal makkale ....oru naazh adhigaaram nam kaiku varum appodhu tharuvom ivarkkum ivar sandhadhikkum nam badhilgalai...

21 February 2012 at 07:50

தமிழர்களே... வருந்தாதீர்கள்... நமக்கான காலம் வரும். அதுவரை காத்திருப்போம் வெறும் காற்றாக மட்டும்... புறப்படும் போது புயல் என்பதைப் புரிய வைப்போம்!

27 February 2012 at 01:10

காட்டிக்கொடுத்தவர்கள் அதற்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள்.

நிலவுமுத்துகிருட்டிணன்
4 August 2012 at 23:32

நிலவுமுதுகிருட்டிணன் சிந்தனைக்குடில் கருணா உன்னை கண்ட துண்டமாக வெட்டி காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்காமல் விடமாட்டான் சிங்களவன் ,உன் சாவு அவன் கையில் ,,,,,எண்ணிப்பார்,விரோதியை மன்னிக்கலாம் ,,,துரோகியை ,,,?

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger