நக்கீரனின் சதியும்... ஜெயலலிதாவின் விதியும்!
ஜெயலலிதாவுக்கு எதிராக எழுதுவதுதான் நக்கீரனின் பத்திரிகை உலகப் பணி. 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்... விவரிக்கிறார் ஜெயலலிதா ' என்ற தலைப்பில் இந்த வாரம் நக்கீரன் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க உள்நோக்கம் வாய்ந்த கட்டுரை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால், இப்படி எல்லாம் பிரச்னை வரும் என்பது நிச்சயமாக நக்கீரனுக்கு தெரியும். தி.மு.க.வின் அடிவருடியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் நக்கீரன், அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி இத்தகைய துணிச்சலான கட்டுரையை எழுதியது என்பது எல்லோருக்கும் ஆச்சரியம்தான்!
இங்கேதான் இருக்கிறது நக்கீரனின் சாமர்த்தியம். கடந்த வாரம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை அழைத்து தனியே மீட்டிங் போட்ட ஜெயலலிதா 'உடனடியாக நக்கீரனை முடுக்குங்கள். நக்கீரன் கோபால் , காமராஜ் இருவரையும் அரெஸ்ட் செய்யுங்கள்' என ஆவேசமாக சத்தம் போட்டு இருக்கிறார். காவல் துறை அதிகாரிகள் இந்த வாரம் நக்கீரன் கோபாலை அரெஸ்ட் செய்ய தயாராக விஷயம் நக்கீரனுக்கு போய்விட்டது. அதன் பிறகுதான் உடனடியாக நக்கீரன் எடிட்டோரியல் மீட்டிங் ஆலோசித்து இருக்கிறது.
'எப்படி இருந்தாலும் ஜெயலலிதா நம்மை அரெஸ்ட் செய்யப் போவது உறுதி. அதனால், அவருக்கு எதிராக நாம் கிளர்ந்து எழுந்தால் அதற்காகவே நம்மை அவர் எதிர்ப்பதாக காரணம் காட்டலாம்' என கோபால் சொல்ல , அதற்கு அனைவரும் தலையாட்டி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் மாட்டுக்கறி மேட்டர் தயாராகி இருக்கிறது. இந்த மேட்டரை கொடுத்த புண்ணியவான் காமராஜ். 'அந்தம்மா இப்படி சொன்னதற்கு நம்மிடம் ஆதாரம் இருக்கிறது. அதனால், அப்படியே இந்த மேட்டரை போடலாம்' என காமராஜ் சொல்ல , கோபால் எப்படி மறுக்க முடியும்?
ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுவார் என பொன்னையன் சொன்ன சேதி நக்கீரனிடம் டேப் செய்யப்பட்டு இருப்பதாக உறுதியான வட்டாரம் சொல்கிறது. இந்த விவகாரம் கார்டனுக்குத் தெரிய, சீக்கிரமே பொன்னையன் மீது நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.
நக்கீரன் விவகாரத்தை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டார். அதனால்தான் நக்கீரன் அலுவலக தகர்ப்பு விவகாரத்தை போலீஸ் கண்டுகொள்ளாமல் இருந்தது என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
இதை எல்லாம் விட மிக முக்கியமான விஷயம்... நக்கீரன் இப்போது விற்பனையில் படுபாதாளத்தில் கிடக்கிறது. எப்படியாவது விற்பனையில் நம்பர் ஒன் வந்துவிட வேண்டும் என்பதுதான் நக்கீரனின் தற்போதைய திட்டம். அதற்காக எழுதப்பட்டதுதான் மாட்டுக்கறி மேட்டர்.
நினைத்தபடியே நக்கீரன் இன்றைக்கு பரபரப்பு இதழாகி விட்டது. நக்கீரனின் ப்ளான் தெரியாமல் ஆத்திரத்தில் ஜெயலலிதா அந்த இதழுக்கு இன்னும் பிரசித்தி தேடிக் கொடுத்து விட்டார். அவருடைய அவசர குடுக்கைத்தனம் நக்கீரன் என்கிற நாச சக்தியை இன்னும் வளர்க்கவே செய்யும்.
Labels:
kumbal,
கும்பல்,
கோபால்,
நக்கீரன்,
நக்கீரன் அட்டாக்,
நக்கீரன் கோபால்





Post a Comment