சீமானுக்கு மீண்டும் சிக்கல்?!
சீமானின் சமீபத்திய மேடைப் பேச்சுகள் ஆளும் அரசுக்கு எதிராக திரும்பி வருகிறது. இதனைக் கவனமாக பதிவு செய்து மேலிடப் பார்வைக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது உளவுத்துறை. இதன் பின்னணியில் தான் ராமேஸ்வரம் வழக்கை மீண்டும் போலீஸ் கையிலெடுத்து இருப்பதாக சொல்கிறார்கள். அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் தூக்கியடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என இந்த ஆட்சியின் சமீபத்திய குளறுபடிகளை மேடைகளிலும், மீடியாக்களிலும் ஆவேசமாகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார் சீமான். சசிகலா விவகாரத்தையும் அவர் விட்டுவைக்காமல் விளாசுவதால், கடுப்பிலிருக்கும் ஆளும் கட்சி சீமான் மீது சீக்கிரமே பாய்ச்சலைக் காட்டும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தினர். பாயும் புலி பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய அக்கறையும்!
Labels:
jayalalitha,
seeman,
சீமான்,
நாம் தமிழர்,
ஜெயலலிதா

+ comments + 3 comments
சீமான் இதுகாலம் வரை ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசாமல் இருந்ததே தவறு. ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா திடீரென ஆர்வம் காட்டியதால் சீமான் அமைதியாக இருந்தார்; ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவும் நடத்தினார். ஆனால், இன்றைய நிலையில் ஜெயலலிதா முழுக்க முழுக்க பிராமணப் பிடிக்குள் போய்விட்டார். இனி ஈழமாவது எழவாவது... தமிழனாகப் பிறந்த எவருக்கும் இனி அவரால் நன்மை செய்ய முடியாது. சசி அன்ட் கோ , கலைஞர் கம்பெனியை பழிவாங்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். சீமான் விவகாரத்தில் இரண்டாவது கருணாநிதியாக ஜெயலலிதா மாறுவது நிஜம். காரணம், விமர்சனத்தைத் தாங்கிகொள்ள இருவருக்குமே பக்குவம் கிடையாது.
சீமான் அண்ணா... நீங்கள் கைது பயத்தை நினைத்தெல்லாம் கவலைப்படாதீர்கள். சிறைதான் உங்களுக்கான விவாத தளம். நாங்கள் அனைவருமே உங்கள் பின்னால் நிற்கிறோம். வெல்லட்டும் நாம் தமிழர்!
anna dont trust anyone ,jayalalitha is darkmoon and karuna is nextday
nalanvirumpi
பாயும் புலிக்கு
சிறை ஒரு தடையா?
சிறை தான் பயிரச்சி பட்டறை
இனி தான்
ஆட்டம் ஆரம்பம்...
Post a Comment