ரூ.3,600 கோடியில் புதிய அனல் மின் நிலையம்
எண்ணூரில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த அனல் மின் நிலையம் வரும் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், எண்ணூரில் இப்போது செயல்பட்டுவரும் அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக புதிய அனல் மின் நிலையத்தை நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட மொத்தம் 450 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இங்குள்ள இயந்திரங்கள் செயலிழந்து வருகின்றன. இதனால், இந்த அனல் மின் நிலையம் முழு உற்பத்தித் திறனுடன் செயல்பட முடியவில்லை.
எனவே, எண்ணூரில் 5 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய மின் உற்பத்தி இயந்திரங்களை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில், அதி நவீன தொழில்நுட்பத்துடன் 600 மெகாவாட் திறனுள்ள மாற்று அனல் மின் நிலையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Labels:
Dinakaran,
Dinamani,
kumbal,
Power Plant,
அனல்மின் நிலையம்,
கும்பல்,
தினகரன்,
தினத்தந்தி,
தினமணி

Post a Comment