கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4-ம் தேதி வரை விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகளில் மரங்கள் விழுந்தும், மின் கம்பங்கள் சாய்ந்தும் வகுப்பறை கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகரில் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் மின் விநியோகம் இன்னும் சீரடையவில்லை. மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் சாலைகள் செப்பனிடப்படாததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை (2-ம் தேதி) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீட்புப் பணிகள் தாமதம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வரும் 5-ம் தேதி திறக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பிடுவதற்காக முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் 3-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில்... விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கா.த. மணிமேகலை அறிவித்துள்ளார்.
புதுச்சேரி... புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.
Labels:
cuddalore,
Dinakaran,
Dinamani,
earthquake,
kumbal,
Power Plant,
கடலூர்,
கும்பல்,
தானே,
தினகரன்,
தினத்தந்தி,
தினமணி
Post a Comment