இரண்டு வாரங்களில் செயல்படும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று கட்டப் போராட்டங்களை அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று முதற்கட்டமாக, இடிந்த கரையில் இருந்து ராதாபுரம் நோக்கி, பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்டன ஊர்வலம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, அணு உலை செயல்படத் தொடங்கினால், இரண்டாம் கட்டப் போராட்டமாக அணுமின் நிலையம் முன்பாக, குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். வரும் 31ஆம் தேதிக்குள் அணு உலையில் இருந்து யுரேனியத்தை வெளியேற்றாவிட்டால், மூன்றாவது கட்டமாக, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மிகப் பெரிய அளவிலானப் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வரும் 28ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறவிருந்த மாநாடு 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதில், அன்னாஹசாரே குழுவினர் பங்கேற்கவுள்ளதாகவும் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment