கூட்டுறவு மருந்துக் கடைகள்
தமிழக அரசின் சார்பில், மாநிலத்தின் நூறு முக்கிய சிறுநகரங்களில், கூட்டுறவு மருந்துக் கடைகள் அமைக்க நடவக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் கூட்டுறவு மருந்துக்கடை ஒன்றைத் திறந்து வைத்துப் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என்றார். கூட்டுறவு அமைப்பு மூலம் இந்த மருந்துக் கடைகளை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கடைகளில் 15 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் மருந்துகள் காலாவதியாகும் நாள், மொத்த இருப்பு போன்றவற்றை கணக்கிடும் வகையில், அனைத்துக் கடைகளும் கணினி மயமாக்கப்படும் என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Post a Comment