சென்னையில் ஹசாரே !
வலிமையான லோக்பால் மசோதா உருவாக்கக் கோரி வரும் 27ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ள அன்னா ஹசாரே, அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், ஹசாரேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டருக்குச் செல்கிறார். அங்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி பற்றிய திரைப்படத்தை அவர் காண உள்ளார். பிற்பகல் 3 மணியளவில் அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார். பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஹசாரே உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை, சென்னையைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் செய்துள்ளது. ஹசாரேவின் பொதுக் கூட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹசாரேவின் வருகையைக் கண்டித்து, ஒரு தரப்பினர் விமான நிலையத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது

Post a Comment