சென்னை ஐ.ஐ.டி. கேம்பஸ் இன்டர்வியூவில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க தடை விதிக்க கோரி வழக்கு
சென்னை வக்கீல் பழனி முத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி வரை 2 மாதங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறுகிறது. இதில் பொதுத்துறை நிறுவனமான ஐ.ஓ.சி., இந்துஸ்தான், பெட்ரோலியம், ஏரோநாட்டிக்கல், நேவி, உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதனால் மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். சட்டப் படி பொதுதுறை நிறுவனங்களுக்கான வேலை நியமனம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது பத்திரிகை வாயிலாக பொது அறிவிப்பு செய்து நடத்தப்படவேண்டும்.மேலும் இதுபோன்ற கேம்பஸ் இன்டர்வியூவினால் ஒரு சில கல்வி நிறுவனங்கள் இதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றன.
இதனால் பெற்றோர்கள் மத்தியில் குறிப்பிட்ட கல்லூரியில் இடம் வாங்க வேண்டும் என்று பைத்தியக்காரத்தனமாக அலைகின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் நன்கொடைகளை உயர்த்துகின்றன. ஆகவே கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த தடை விதிக்க வேண்டும்.ஐ.ஐ.டி.யில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வருகிறது.
Labels:
தமிழகம்

Post a Comment