கூடங்குளம் போராட்டம் : போராளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: கூடங்குளம் இணுமின் நிலைய செயல்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நலன் மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.14 ஆயி ரம் கோடி மதிப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் செயல்பாடுகள் தொடங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அணுமின் நிலைய செயல்பாடுகள் முடங்கி உள்ளது. அங்கு செல்லும் ஊழியர்களை போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்துகிறார்கள்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் உதயகுமார், அவரது ஆதரவாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து இது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., நெல்லை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Labels:
தமிழகம்

Post a Comment