மத்திய அரசின் மறைமுக நடவடிக்கையால் கேரளம் பின்வாங்கியுள்ளது: ஞானதேசிகன்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு மறைமுக நடவடிக்கை மேற்கொண்டதால்தான் கேரள அரசு பின்வாங்கியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் மற்றும் முல்லைப் பெரியாறு விவகார விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:
மத்திய அரசு சில நேரங்களில் நேரடி நடவடிக்கையிலும், சில நேரங்களில் மறைமுக நடவடிக்கையிலும் ஈடுபடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இப்போது மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாகமே கேரள அரசு பின்வாங்கியுள்ளது.
சிதம்பரத்துக்குத் தொடர்பு இல்லை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் நிலை உள்ளது. இதில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம். இதன் காரணமாகவே உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் மீது பாஜகவினர் வீண் பழி சுமத்துகின்றனர். கிரிமினல் வழக்கு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் சிதம்பரத்துக்குத் தொடர்பு இல்லை. தில்லி அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் அவர் அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளார் என்றார் ஞானதேசிகன்.

Post a Comment