நடக்குமா நடராஜன் விழா?
வருடம்தோறும் பொங்கல் திருநாளில் தஞ்சாவூர் தமிழரசி மண்டபத்தில் தமிழ் திருநாள் நடத்துவது எம்.நடராஜனின் வழக்கம். இந்தமுறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையடுத்து இந்த வருடத்தில் தமிழ் திருநாளை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தார் எம்.நடராஜன். இதற்கிடையில் சசிகலா, ஜெயலலிதா பிரிவு நிகழ எம்.என். விழா நடக்குமா? நடக்காதா? என்கிற பேச்சு அலையடிக்க ஆரம்பித்து விட்டது.
தற்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவிற்க்கு தலைமறைவாகி இருக்கும் நடராஜன் பொங்கல் விழா குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 'அண்ணன் நிச்சயம் விழாவை வழக்கம் போல் நடத்துவார். கட்சியிலிருந்து கட்டம் கட்டிய ஜெயலலிதாவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்' என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் சசிகலாவின் உறவுக்காரர்கள். பதிலடி கொடுப்பாரா? இல்லை பதுங்கியே கிடப்பாரா? பார்க்கலாம். எம்.என்.. என்ன செய்ய போகிறார் என்று.
Labels:
தமிழகம்

Post a Comment