கேரளாவில் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு காங்கிரசே காரணம் - சீமான் குற்றச்சாற்று
கேரளாவில் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மத்தியிலும், கேரளத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றம்சாற்றினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கான போராட்டத்தை முன்னின்று நடத்தப்போவதாக கூறினார்.
நாளை நடக்கிற உண்ணாவிரதப் போராட்டம் குறித்த அறிவிப்பினை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
கேரளாவில் வாழும் எம் சொந்தங்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மத்தியிலும், கேரளத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சீமான் குற்றம்சாற்றினார்.

Post a Comment