முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய கருத்திற்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேப்போன்று கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனும், முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான கருத்திற்காக சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிதம்பரம், அரசியல் சாசனத்தை மீறியதுடன், தமிழ்நாடு கேரளாவுக்கு இடையே வன்முறை தூண்டிவிடுவதாகவும் அச்சுதானந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தேவையற்ற பீதியை மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும், இடைத்தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் இவ்வாறு செய்து வருவதாகவும் சிதம்பரம் பேசியிருந்தார்.

Post a Comment