30-ம் தேதி சென்னையில் கூடுகிறது ! - அதிமுக பொதுக்குழு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வரும் 30ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அவைத்தலைவர் மதுசூதனன் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். முதல்வரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 17 பேர் நீக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர் உள்பட 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை, தமிழகத்துக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்க கோருதல், கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை, ஜெயலலிதா பிறந்த நாள் விழா உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிகிறது.
Labels:
தமிழகம்

Post a Comment