தானே புயலால் சென்னை மெரினாவில் கடல் கொந்தளிப்பு !
தானே புயலால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும், சுமார் 100 அடி வரை கடல் நீர் ஊருக்குள் புகுந்ததாகவும், 2004 சுனாமிக்கு பின்னர் இப்போதுதான் கடல் இந்த அளவிற்கு கொந்தளிப்பாக உள்ளதை அறிவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலோரம் இருக்கவே மிகவும் அச்சமாக உள்ளதாக மீனவப்பெண்கள் தெரிவித்துள்ளனர். தானே புயல் உருவானதால் சுமார் 2000 மீனவர்கள் 4 நாட்களாக கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
தமிழகம்

Post a Comment