Latest Movie :

விலகல் கடிதம் அனுப்பினார் நாஞ்சில் சம்பத்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் இடையே நிகழ்ந்துவந்த பனிப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'கண்மூடும் வரை கட்சியைவிட்டு விலக மாட்டேன்' என சபதம் செய்த நாஞ்சில் சம்பத், இரண்டு வாரங்களிலேயே மனம் நொந்து போனார். அவருக்கு புக்காகி இருந்த கட்சி நிகழ்சிகள் அனைத்தும் காரணமே சொல்லாமல் ரத்து செய்யப்பட, 'வைகோவின் உத்தரவுப்படியே இப்படி நடக்கிறது' என்கிற முடிவுக்கு வந்தார் நாஞ்சில். 'கட்சியில் எனக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், கட்சி என்னை விலக்கும் வரை காத்திருப்பேன்' எனச் சொன்னார் நாஞ்சில்.

இதற்கிடையில் நாஞ்சிலை அழைத்து சமாதானம் பேசலாம் என சிலர் வைகோவிடம் சொல்ல, 'சுரேஷ்ராஜன் மூலமாக தி.மு.க.வில் சேர சம்பத் முடிவெடுத்து விட்டார். இதன்பிறகு என்ன பேசுவது?' என்றாராம் வைகோ. தி.மு.க.விலிருந்து தனக்கு அழைப்பு விடுக்கப்படும் நிகழ்வுகள் வரை வைகோவுக்கு தெரிய வந்துவிட்டதால், இனியும் கட்சியில் நீடிக்க விருப்பமற்று தனது விலகல் கடிதத்தை தாயகத்துக்கு அனுப்பிவிட்டார் நாஞ்சில் சம்பத். இந்தத் தகவலைக்கூட வெளியே விடாமல் ரகசியம் காக்கிறது ம.தி.மு.க. தலைமை.   

மிக விரைவில், கன்யாகுமரி மாவட்ட தி.மு.க. புள்ளிகள் புடைசூழ கருணாநிதி முன்னிலையில் தாய்க் கழகத்தில் ஐக்கியமாவார் நாஞ்சில் சம்பத்! அப்படி என்றால் இதுகாலம் வரை கருணாநிதியை சகட்டுமேனிக்கு வசைபாடிய வாயை என்ன செய்வது என்பதுதானே உங்க கேள்வி. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என சூரியன் படத்திலேயே  கவுண்டமணி சொல்லிட்டு போயிட்டாரே... அதுதான் உங்க திகைப்புக்கான பதில்!

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger