கொந்தளிக்கும் திருமா!
தர்மபுரியில் நடந்த சாதி வெறி கலவரம் சம்பந்தமான விசாரணையை மத்திய
புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி விடுதலைச்சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன் காவல் துறை மீது அனல் கக்கினார்.
''தர்மபுரியில் கலவரம் தொடர்ந்து 6 மணி நேரம் நடந்திருக்கிறது. காவல்துறை
அதிகாரிகளோ, அரசு அதிகாரிகளோ தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பணத்துக்காக காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுவது அப்பட்டமான
பொய். காதல் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம்.

அது எந்த சாதியாளராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட உரிமை கிடையாது.தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வயது குறைவு என்பது
அப்பட்டமான பொய். தர்மபுரியில் நடந்த சம்பவத்தை தமிழக காவல்துறையோ,
சிபிசிஐடியோ விசாரித்தால் கட்டாயம் உண்மை வெளிவராது. நியாயம் கிடைக்காது.
ஆகவே மத்திய அரசின் மைய புலனாய்விடம் இந்த வழக்கை மாற்ற வேண்டும். தர்மபுரி கலவரத்துக்கு முழுக்க முழுக்க தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
இப்படியே போனால் தமிழகம் என்னவாகும் என்பது தெரியவில்லை" என கொந்தளித்தார் திருமாவளவன்.

+ comments + 1 comments
bluffing
Post a Comment