தமிழ் சினிமா உலகை மட்டும் அல்லாது, மொத்த இந்திய சினிமா உலகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கும் பாலாவின் பரதேசி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் முன்னோட்டமாக படத்தின் பாடல்கள் வெயிட்டு விழா வரும் 25-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது.
முதன் முறையாக பாலா - வைரமுத்து கூட்டணி இணைந்திருப்பதால் படத்தின் பாடல்களுக்கு ஏகபோக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் உடனான வேலை மிகுந்த திருப்தி அளித்திருப்பதாக பாலாவே மனம்திறந்து சொல்லி இருப்பதால் இசை உலகினரின் எதிர்பார்ப்புக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.
முரளி மகன் அதர்வா உள்ளிட்ட படத்தின் நட்சத்திரங்கள் பாடல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்கிற விவரம் இப்போது வரை சொல்லப்படவில்லை. வழக்கம்போல தன்னுடைய எந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவிலும் மேடையேறும் வழக்கம் கொள்ளாத பாலா இந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா மேடையிலும் ஏறப்போவது இல்லையாம்.
சைலண்டா இருந்தே சாதியுங்க பாலா!

Post a Comment