Latest Movie :

தி.மு.க. கறையைத் துடைக்க நாஞ்சில்!

சம்பத்துடன் பேசினார் ஸ்டாலின்!

ம.தி.முக.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இன்றைய தினம் வரை நீடிக்கும் நாஞ்சில் சம்பத் விரைவில் தாய்க்கழகமான தி.மு.க.வில் இணைய இருக்கிறார் என்பதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்நிலையில் சம்பத் வருகைக்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே இதுநாள் வரை தடையாக இருந்தார். இதுதேரிந்து, 'ஸ்டாலின் வளர்ச்சியை வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை' என மீடியாக்களிடம் நாஞ்சில் சம்பத் சொல்ல, இந்த வார்த்தைகள் ஸ்டாலின் மனத்தைக் கரைத்துவிட்டதாக சொல்கிறார்கள் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள். இந்நிலையில், நேற்று (17.11.12) மாலை ஸ்டாலின் நாஞ்சில் சம்பத்துடன் போனில் பேசியதாக பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

ஈழ விவகாரத்தில் தி.மு.க. மீதான கறை இன்றுவரை துடைக்கபடாத நிலையில், நாஞ்சில் சம்பத்தை தமிழகம் முழுக்க அனுப்பி ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்க வைத்து ஈழத்துக்காக தி.மு.க. ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைக்கக வைக்க ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறாராம். தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக, குறிப்பாக ஸ்டாலினின் வலதுகரமாக முழங்கி வந்த வெற்றிகொண்டான்  கடந்த வருடம் மறைந்த பிறகு, அந்த இடத்துக்கு ஆள் இல்லாமல் அல்லாடித் தவிக்கிறது தி.மு.க. நாஞ்சில் அந்த இடத்துக்கு நச்சென பொருந்துவார் என நினைக்கிறார் ஸ்டாலின். இதுகுறித்து நாஞ்சில் சம்பத்துடன் பேசிய ஸ்டாலின் மரியாதை மிக்க பதவியைக் கொடுக்கவும் தயார் எனச் சொல்லியிருக்கிறார்.

தளபதியே இறங்கி வந்த பிறகு நாஞ்சிலின் சிலிர்ப்புக்கு சொல்ல வேண்டுமோ என்னவோ... 'தேதி சொல்லுங்கள்... தேடி வருகிறேன். உங்களை வீழ்த்த நினைத்த வைகோவை முகவரி இல்லாமல் செய்கிற பொறுப்பை நான் பார்த்துக் கொள்கிறேன்!' எனப் பூரித்தாராம்.

கறையைத் துடைக்கும் பணியை கச்சிதமாக செய்யட்டும் சம்பத்! 
Share this article :

+ comments + 1 comments

18 November 2012 at 04:47

நாஞ்சில் இத்தனை நாளாக கொஞ்சம் மரியாதையோடு இருந்தார். திமுகவின் மதிப்பை சரி செய்வதாக நினைத்து தன்னைக் கேவலப்படுத்திக்கொள்ள போகிறார் நாஞ்சில்.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger