Latest Movie :

அஜித் vs கௌதம்... கதை சொன்ன கதை!

மீபத்தில் ஒரு நாள்... இரவு நேரம்...  இயக்குனர் கௌதம் மேனனை தன் வீட்டுக்கு அழைத்துக் கதை கேட்டு இருக்கிறார் அஜீத். தான் உருவாக்கி  வைத்திருந்த ஒரு பவர்புல் ஆக்க்ஷன் கதையை ஆர்வத்தோடு போய்ச் சொல்லியிருக்கிறார் கௌதம். அஜீத்தும் ஷாலினியும் கதையை கேட்டு இருக்கிறார்கள். கதையை கேட்டுச் சிலிர்த்துப் போன அஜீத்தும் ஷாலினியும் கௌதமை ஆகோ ஓகோ என்று புகழ்ந்திருக்கிறார்கள். கௌதமுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அதேநேரம்  ''நல்ல கதையைச் சொன்னால், 'தல' தலைதெறிக்க ஓடுவாரே... இன்னைக்கு இவ்வளவு சாந்தமா கேட்டுக்கிட்டு இருக்கிறாரே..." என கௌதமுக்கு குழப்பமும் கும்மியடித்தது.
கௌதமின் குழப்பத்தை அறிந்தவராக, அஜீத் தன் மனைவி ஷாலினியிடம் ''பழச்சாறு''அருந்துவதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார். அந்த நள்ளிரவில்  பழச்சாறைச் சுவைத்தவாறே இருவரும் மனம் விட்டுப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அஜீத், ''கௌதம்,கதை ரொம்ப நல்லா இருக்கு... கதையில நிறைய நைட் சீன் வருதுல்ல...'' என்றிருக்கிறார்.

''ஆமா  அஜீத்,மேக்கிங்ல அதை நாம மெரட்டிரலாம்'' என்றார் கௌதம்.

அடுத்தபடியாய் அஜீத், ''கௌதம், இப்பல்லாம் 6 மணிக்கு மேல வீட்டுக்கு வந்தா  ஷாலினி டென்ஷன் ஆகுறா, அதனால அந்த நைட் எபெக்ட் சீனை எல்லாம் தூக்கிடுங்க'' என்றிருக்கிறார்.

''சரி அஜீத்... தூக்கிடலாம்'' என்ற கௌதம், இது எதிர்பார்த்ததுதானே என்று எண்ணியவாறே  பழச்சாறு கலவையில் மூழ்கியிருக்கிறார். மீண்டும் அஜீத் ''கௌதம், பாதி படம் அமெரிக்காவுல நடக்குதுல்ல...... சுத்த வேண்டியது எல்லாம் சுத்தியாச்சு... இனி அமெரிக்கா போய்தான் போலிஸ் வேஷம் போடணுமா, அந்த சீனை எல்லாம் இங்கயே நடக்குறது மாதிரி மாத்திடுங்க'' என்றிருக்கிறார் அஜீத்.

''என்னடா இது... கட்ட வண்டி கடல்ல போறது போல தெரியுதே" என்று உணர்ந்த கௌதம் பருகிய பழச்சாறை  பாதியோடு வைத்து விட்டு அஜீத்தின் பேருரையை முழுமையாக கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

அஜீத்தோ  அதன் பிறக்கும் ஓயவில்லை.  ''அப்புறம்... கௌதம்! சாங்ஸ் பத்தி சொன்னிங்கல்ல... எல்லாம் சுப்பரா வருமுன்னு தெரியுது. அதுல நாலு சாங்ஸ்ல கடுமையா ஸ்டெப்ஸ் போட்டு ஆடணும் போல இருக்கு, அதையெல்லாம் சும்மா வாக் போறது மாதிரி மாத்திருங்க... இப்ப உடம்பு இருக்கிற கண்டிசன்ல நாலு நாளு உடம்ப தூக்கி ஆடுனா அப்புறம் நாலு மாசம் பெட்ல  இருக்கணும்." என்றிருக்கிறார்.

''அப்படியே செஞ்சுடலாம் அஜீத்'' என்ற கௌதம், பேயறைந்தவர் போல் அஜீத் பேசுவதை கேட்டுகொண்டிருந்திருக்கிறார். மேலும் அஜீத், ''பைட்  சீனை பத்தி சொன்னிங்கல்ல கௌதம்...  அதெல்லாம்  ரொம்ப ரிஷ்க்கான பைட்டா  தெரியுது.  ஏற்கனவே 7 முறை ஆபரேசன் செஞ்ச முதுகுத்  தண்டு. இனி அதுல எதாவது ஆச்சுன்னா லைப் லாங்கா பெட்ல இருக்க  வேண்டியது தான். அதனால அந்த ரிஸ்க்கான பைட் சீனை எல்லாம் தூக்கிடுங்க..."   என்றாராம்.

அஜீத்  பேசியதை எல்லாம் பொறுமையாக கேட்ட கௌதம், ''அஜீத் நீங்க சொல்றதை எல்லாம் தூக்கிட்டா படத்துல டைட்டில்கார்டும் என்ட்கார்டும் மட்டும்தான் இருக்கும்'' என்றாராம்.

இதில் முகம் சுண்டிப்போன அஜித், ''நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்? எல்லாருகிட்டயும் சொல்லுறததான் சொன்னேன். அதுக்கு போய் கௌதம் இப்படி போங்குறாரே. இது நமக்கு செட்டாகாது ஷாலினி...'' என்றபடி எழுந்து சென்றுவிட்டாராம் அஜித்.


இதை தன் நெருங்கிய வட்டத்திடம் சொல்லிச் சொல்லிச் சிரிக்கும் கௌதம் மேனன், ''அஜித்கிட்ட கம்ப்யூட்டர் கூட கதை சொல்லி தப்பிக்க முடியாதுடா சாமி..." என்கிறாராம் வயிறு குலுங்கியபடி.

- எம்.சபா 













Share this article :

+ comments + 1 comments

Anonymous
18 November 2012 at 04:52

கதை சொன்ன கதையையே தனிப் படமாக பண்ணலாம் போலிருக்கே... கௌதம் சார்... நீங்க ரொம்ப பாவம்

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger