''நீங்க கேட்கிறப்ப எல்லாம் பேட்டி கொடுக்க நீங்க என்ன சம்பளமா கொடுக்குறீங்க? உங்க பத்திரிக்கை நிறுவனத்துக்கிட்ட நீங்கதானே சம்பளம் வாங்குறீங்க..."
- பேட்டி கேட்ட நிருபருக்கு விஜயகாந்த் சொன்ன பதில் இது. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பாலு என்கிற அந்த நிருபரை பிடித்துக் கிழே தள்ளி 'நாயே... இதுக்கு மேல பேசினா அடிச்சே புடுவேன்...' என நாக்கைத் துருத்தி மிரட்டிவிட்டும் சென்றார் விஜயகாந்த். கட்சி எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ஆளும் கட்சிப் பக்கம் போன கோபத்தை பத்திரிக்கையாளர்கள் மீது கொட்டிவிட்டுப் போனார் விஜயகாந்த். சும்மா விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்?
'விஜயகாந்துக்கு சம்பளம் கொடுப்போம்...' என அறிவிப்பு வெளியிட்டு அதற்காக நிதியும் திரட்டத் தொடங்கி விட்டார்கள். சென்னை பிரஸ் க்ளப் அமைப்பினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து, திரட்டப்படும் தொகையை விஜயகாந்தின் கட்சி அலுவலகத்துக்கு கொண்டுபோய் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
கண்சிவக்கும் கறுப்பு எம்.ஜி.ஆர். என்ன செய்யக் காத்திருக்கிறாரோ...?

Post a Comment