''என்னை சிக்க வைத்த அரசியல்வாதிகள்!"
பத்து கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி பல லட்சங்கள் மோசடி செய்த பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி, மகள்கள் கூட அவரை சிறையில் சென்று சந்திக்கவில்லை. இதனால் மனம் உடைந்துபோன பவர் ஸ்டார் ''எத்தனையோ பேருக்கு பணத்தை அள்ளி இறைச்சேன். ஆனால், பெத்த பிள்ளைகளே என்னைய வந்து எட்டிப் பார்க்கலை. பெயில் கிடைச்சதும் வைச்சுக்கிறேன் கச்சேரியை!" என கொந்தளித்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் பவர் ஸ்டாரை சந்திக்க மனுப்போட்டு காத்திருக்க அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் பவர். ''இவனுங்க தொந்தரவாலதான் நான் இன்னிக்கு ஜெயிலுக்குள்ள கிடக்குறேன். பல கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு என் பெயரை பயன்படுத்தி அசிங்கப்படுத்திட்டாங்க. நிதி அமைச்சர் பன்னீர் செல்வம், மேயர் சைதை துரைசாமி, கல்வி அமைச்சர் பழனியப்பன், அமைச்சர் கோகுல இந்திரான்னு பல ஆளும் கட்சி புள்ளிகள் எனக்குப் பழக்கம். ஆனால், அவங்க யாரும் என்னையக் காப்பாத்தலை. 'பவர் ஸ்டார்னு பேர் வைச்சதே நாந்தான்'னு சொல்ற விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் என்னைத் திரும்பிப் பார்க்கலை. அவருக்கெல்லாம் கட்சி நிதி எவ்வளவு கொடுத்திருப்பேன். ஆனால், அத்தனை அரசியல்வாதிகளும் என்னை ஏமாத்திட்டாங்க. வெளியே வந்து அவர்களின் முகத்திரையைக் கிழிப்பேன்!" என நொந்து புலம்பி இருக்கிறார் பவர்.
பவர் வெளியே வந்த பலர் நடுங்குவாங்க போலிருக்கே!
Post a Comment