Latest Movie :

தயாரிப்பாளர் தேவை... தயாராகிறார் கேப்டன் மகன்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்த தினம் வருகிற 25 ம் தேதி. ஆகஸ்ட் மாதம் முழுவதுமே பிறருக்கு நற்பணி செய்யும் மாதமாக அறிவித்து தமிழ்நாடு முழுக்க வலம் வரும் விஜயகாந்த் இப்போதைக்கு சினிமாக்களில் தலை காட்ட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால் அரசியல் நடவடிக்கைகளை தீவிரபடுத்தி படித்தி வரும் விஜயகாந்த் தனது  மகன்  சண்முக பாண்டியனை சினிமாவில் இறக்கி விட தயாராகிவிட்டார். இதுவரை நாற்பதுக்கு மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்ட விஜயகாந்த் எந்த கதையிலுமே திருப்பதி அடையவில்லை. இப்போதும் கதை கேட்கும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதத்திற்குள் மகனின் சினிமா என்ட்ரியை அறிவித்துவிட வேண்டும் என சபதம் போடும் விஜயகாந்த், தயாரிப்பாளர்களுக்காகவும் காத்துகிடக்கிறார். தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினரும், சினிமா தயாரிப்பாளருமான  மைக்கேல் ராயப்பனிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தபட்டுள்ளது.. ''கேப்டனுக்காக உயிரையே கொடுப்பேன்" என டயலாக் பேசி அசத்திய மைக்கேல் ராயப்பன், ''ஒரு வருடத்திற்கு பொறுத்துக் கொள்ளுங்கள் இப்போது பைனான்ஸ் டைட்!" எனச் சொல்லி எஸ்கேப்  ஆகிவிட்டாராம். 

அதனால் தயாரிப்பாளர் தேடும் வேலை தீவிரமாக நடக்கிறது. எவருமே மறுக்கும் பட்சத்தில் சண்முகபாண்டியன்  கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை கேப்டன் சினி கிரியேசன்ஸ் நிறுவனமே தயாரிக்கும். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger