''நான் தற்கொலை முயற்சி செய்யவில்லை. தற்கொலை முயற்சி செய்கிற அளவுக்கு எனக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. லேசான காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டதால் மருத்துவர்களை கலந்து ஆலோசிக்காமல் நானே மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். மாத்திரைகளின் பவர் தெரியாமல் விழுங்கியதால் மயக்கம் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.இப்போது நான் சரியாகிவிட்டேன்!" - நடிகை சுஜிபாலா மருத்துவ சிகிச்சை முடிந்து பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த விளக்கம் இது.
மாத்திரைகளைத் தெரியாமல் விழுங்கும் அளவுக்கு சுஜிபாலா படிக்காதவரோ, அவசரத்தனம் கொண்டவரோ இல்லை. ஆனாலும், தனிப்பட்ட விவகாரத்தில் அவர் கூறும் கருத்தை நாம் அமோதிப்பதே நலம். தன்னிலை விளக்கத்துக்கு அடுத்தபடியாய் சுஜிபாலா கொடுக்கும் விளக்கம் தான் வேதனையானது.
''எனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. 'உண்மை' படத்தின் இயக்குனர் ரவிக்குமாரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். வரும் அக்டோபர் மாதம் எங்களுக்குத் திருமணம். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிடுவேன்.
சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தாலும், என் எதிர்காலக் கணவருக்கு அதில், விருப்பம் இல்லை. அதனால், என் சினிமா வாழ்க்கை நிறைவுக்கு வந்துவிட்டது." என்கிறார் சுஜிபாலா. இந்த முடிவை
அவராக எடுக்கவில்லை. இதன் பின்னணியில் மிகக் கொடூரமான மிரட்டல்களும் ஏமாற்றுகளும் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இயக்குனர் ரவிக்குமாரைக் காதலித்த சுஜிபாலா டான்ஸ் மாஸ்டர் ஒருவரோடு பேசிச் சிரித்ததாகவும், அதுதான் அவருக்கு சிக்கலானதாகவும் கோடம்பாக்கமே கும்மியடிக்கிறது.
''டான்ஸ் மாஸ்டர் யாருடனும் எனக்கு பழக்கம் இல்லை. நான் தற்கொலை முயற்சி செய்ததாக வெளியே செய்தி கசிந்த போது டான்ஸ் மாஸ்டர் அசோசியேஷனில் இருந்து எனக்கு நிறைய விசாரிப்புகள்
வந்தன. அதன் பிறகுதான் இப்படியொரு செய்தி பரவி இருப்பதே எனக்குத் தெரியும்!" என்கிறார் சுஜிபாலா.
தற்போது சுந்தர்.சி.யின் 'எம்.ஜி.ஆர்' படத்தில் நடித்து வரும் சுஜிபாலா
சினிமாவுக்கு முழுக்குப் போடவிருப்பது இன்னொரு தற்கொலைக்குச் சமமான விசயம்தான். சினிமா கனவுகளோடு வந்து, பலரிடமும் போராடி, காதல் கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு ஆளாகி இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது சினிமாவில் தொடரும் துயரம்தான். முன்னணி இடத்தைப் பிடித்த பல நடிகைகளுக்கு இந்தத் துயரம் நிகழ்ந்திருக்கிறது.
மிக நெருக்கடியான நேரங்களில் தைரியமாக முடிவெடுத்த எத்தனையோ நடிகைகள் இன்றைக்கும் பிரபலங்களாக ஜொலிக்கிறார்கள். சுஜியின்
வாழ்வில் அது பலிக்காமல் போனதுதான் வேதனை!


+ comments + 2 comments
கும்பல் இப்போதெல்லாம் அரசியல் புலனாய்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு முற்று முழுதாக சினிமாவில கவனம் செல்லுத்துகிறது போலுள்ளதே...
Suji bala, anusha matters thevai thaaaana kumbal?
Post a Comment