''சிம்பு - நயன்தாரா மீண்டும் சந்தித்துப் பேசிவிட்டார்கள். விரைவில் ஒரு படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இதற்கு நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டார்!" - சொல்லி வைத்தாற்போல் பல மீடியாக்களில் இப்படியொரு செய்தி தொடர்ந்து கசிந்து வருகிறது. சிம்பு - நயன் இணைந்தால் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என நினைத்த பலரும் சிம்புவை வைத்துப் படம் பண்ண கல்லாப்பெட்டியோடு கிளம்பினார்கள். ஆனால், சிம்புவை அவர்களால் அணுகவே முடியவில்லை.
இதற்கிடையில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தை தமிழகத்தில் வெளியிட்டு கையைச் சுட்டுக்கொண்டு கவலையில் கிடக்கும் டி.ராஜேந்தரிடம் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். 'பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சிம்பு - நயன் கால்ஷூட் மட்டும் வாங்கித் தாருங்கள்' என பிசினஸ் கணக்கை அவரிடம் விலாவாரியாகச் சொன்னார்கள். ராஜேந்தருக்கும் இதில் சம்மதமே. பல கோடி ரூபாய் நஷ்டத்தில் காய்ந்து கிடக்கும் தனக்கு மகன் மூலமாக விடிவு கிடைக்கும் என நம்பிப்போய் சிம்புவிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார் டி.ஆர்.
''அப்பா, நானும் அந்தப் பொன்னும் சேர்ந்து நடிக்கப்போறதா மீடியாக்கள் சொல்றதை நீங்களும் நம்புறிங்களா? அதெல்லாம் சும்மாப்பா... அந்தப் பொண்ணுக்கும் நமக்கும் செட்டாகவே ஆகாது. நானும் நயனும் சந்திச்சு பேசியதெல்லாம் உண்மைதான். படத்துல சேர்ந்து நடிக்கப்போறதா அந்தப் பொண்ணே சில பத்திரிக்கைகாரங்ககிட்ட சொன்னதும் உண்மைதான். நானும் அதுக்குத் தலையாட்டினேன். அதெல்லாமே சும்மா விளையாட்டுக்கு. அந்தப்பொண்ணு நம்மளை கழட்டி விட்ட மாதிரி நான் அந்தப்பொண்ண கழட்டிவிட இதான் நேரம். பிரபு தேவாவை சங்கடத்தில் ஆழ்த்த அந்தப்பொண்ணு என்னைய பயன்படுத்தப் பாக்குது. விவரம் தெரியாத காலத்துல நான் ஏமாந்தது போதும். இனியும் அப்படியே இருக்க முடியுமாப்பா'' என சிம்பு பேசிக்கொண்டே போக டி.ஆருக்கு பூமியே நழுவுவது மாதிரி இருந்ததாம்.
''இதுகளோட அலப்பறைக்கு நானே ஏமாந்திருக்கேனே... நயன்தாரா நயாகாரா நீர்வீழ்ச்சியோட ஓனர்னு சொன்னாகூட நம்புற நம்ம ஊரு பயலுக எந்தளவுக்கு ஏமாந்திருப்பானுக?" என போவோர் வருவோரிடம் எல்லாம் புலம்புகிறார் டி.ஆர்.


Post a Comment