இப்படிக்கு திருமாவளவன்!
எதிர்வரும் ஆகஸ்ட் 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிறந்த நாள். அதையொட்டி கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் அந்தக் கட்சி விடுத்திருக்கும் கோரிக்கைகளைப் பாரீர்...
''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளான ஆகத்து 17ஆம் நாள் கட்சியின் சார்பில் 'தமிழர் எழுச்சி நாளாக' ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆகத்து-17 எழுச்சித்தமிழர் அவர்களின்
50ஆம் அகவையையொட்டி கட்சியின் சார்பில் நாடெங்கிலும் பொன்விழா கொண்டாடுவதென, சனவரி மாதம் 6ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் கூடிய பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் 2012ஆம் ஆண்டினை 'எழுச்சித்தமிழர் பொன்விழா ஆண்டு' எனக் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது, சனவரி 2012 முதல் திசம்பர் 2012 வரையில் நாடெங்கிலும் புதிய முகாம்களைக் கட்டமைப்பது, எழுச்சித் தமிழர் பொன்விழாக் கொடிக் கம்பங்களை நிறுவுவது, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்குவது, கணவரை இழந்தோர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு உதவிகள் செய்வது, ஊர்தோறும் மரக்கன்றுகள் நடுவது, கட்டணமில்லா மருத்துவ முகாம்களை நடத்துவது, இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, கட்டுரை-கவிதை-பாடல்-பேச்சு போன்ற இலக்கியத் திறன் போட்டிகளை நடத்துவது, இவை போன்ற இன்னபிற நலப் பணிகளைச் செய்வது என திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கேற்ற வகையில் பல்வேறு பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பொன்விழா ஆண்டினை முன்னிட்டு கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து மாவட்டந்தோறும் பொற்காசுகள் வழங்குவது எனவும் செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்கு கருத்தியல் வலிமையோடு பொருளியல் வலிமையும் இன்றியமையாதது என்னும் தேவையினடிப்படையில் பொன்விழா ஆண்டில் பொருளாதாரம் திரட்டுவதற்கான தீவிர இயக்கத்தை மேற்கொள்வதெனவும் அதனடிப்படையில் பொன்விழாவை முன்வைத்து பொற்காசுகளைத் திரட்டுவது எனவும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
கடந்த சூன் திங்கள் 11ஆம் நாள் சென்னையிலும், 16ஆம் நாள் திருவள்ளூரிலும், சூலைத் திங்கள் 5ஆம் நாள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும், சூலைத் திங்கள் 7ஆம் நாள் காஞ்சிபுரம் மாவட்டம் கோழியாளத்திலும், 11ஆம் நாள் மடிப்பாக்கத்திலும் பொற்காசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவற்றைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் பொற்காசுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கென தொலைக்காட்சி ஊடகம் ஒன்றைத் தொடங்குவதும், கட்சியின் செயல் திட்டங்களில் இன்றியமையாத ஒன்றாகும். அதற்குப் பயனளிக்கும் வகையில் பொற்காசுகள் திரட்டும் இவ்விழாக்கள் அமையும் என்ற நம்பிக்கையில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்து, பொன்விழா மாநாட்டினையொட்டி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரைகள், எழுத்துக்கள் உள்ளிட்ட கட்சிக்கான ஆவணங்களை 50 நூல்களாக வெளியிடுவது என்றும், பொன்விழா மலர் மற்றும் பொன்விழா பாடல் இசைவட்டுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, எதிர்வரும் ஆகத்து 17ஆம் நாளன்று நாடெங்கிலும் ஆங்காங்கே அமைதியாகவும் எளிமையாகவும் தமிழர் எழுச்சி நாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிறந்த நாளன்று தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் சென்னைக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொற்காசுகளைத் திரட்டுதல் உள்ளிட்ட மேற்சொன்ன அனைத்துச் செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கேற்ற வகையில் ஆகத்து 17 அன்று மையப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி ஏதும் ஒருங்கிணைக்கப்படவில்லை. குறிப்பாக, பிறந்த நாளன்று நடத்தப்பட வேண்டிய பொன்விழா மாநாட்டினை, இவ்வாண்டின் இறுதியில் திசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமையன்று விழுப்புரத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, விழுப்புரத்தில் நடைபெறவுள்ள பொன்விழா மாநாட்டினையொட்டி கட்சியின் கட்டமைப்புப் பணிகளையும் மாநாட்டுக்கான விளம்பரப் பணிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும், தலைமையகத்திலிருந்து அறிவிக்கப்படும் நாள்களில் பொற்காசுகள் வழங்கும் விழாவினை திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென்றும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளையெல்லாம் வெல்லக்கூடிய வகையில் பொன்விழா மாநாட்டுக்கான களப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும் கட்சியின் தலைமையகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது."
முழு அறிக்கையையும் படித்தீர்களா தமிழர்களே... அவனவன் சாப்பிட வழியில்லாம் விலைவாசியை நொந்து அலையும் காலகட்டத்தில் திருமாவளவனுக்கு தங்கம் வேண்டுமாம். தங்கக் காசுகளை வைத்து அவர் தொலைகாட்சி ஆரம்பிக்க வேண்டுமாம். எவ்வளவு தலையாயக் கடமை? சிறுத்தைகள் கட்சியின் அடிப்படைத் தொண்டர்களின் வாழ்வாதார நிலை இந்தத் தலைவனுக்குத் தெரியுமா? சாதியப் பாராமையால் நொந்து திரியும் இந்தத் தொடர்களுக்கு திருமா ஒருவரே கண்கண்ட கடவுள். இந்தக் கடவுளுக்காக போஸ்டர் அடித்தும், கொடி கட்டியும் அல்லாடியத் தொண்டர்கள் அடுத்தபடியாய் தங்கம் சேகரிக்க வேண்டும். தங்கத்தின் விலை வெகு சரளமாகக் குறைந்து விட்டதாக சிறுத்தை தலைவருக்கு மட்டும் சிறப்பு செய்தி வந்ததோ என்னவோ... எல்லாமும் செய்யும் தொண்டன் பிறந்த நாளில் சென்னைக்கு வந்து தலைவரை சந்திக்க கூடாதாம். அவருக்கு தொந்தரவாகி விடுமாம்.
'நமக்கு வாய்த்த அடிமைகள் மிகத் திறமையானவர்கள்' என பிறந்த நாளில் இந்த சிறுத்தைத் தலைவன் ரோம்பவே சிலாகிக்கலாம். அதைப்பற்றி நமக்கென்ன கவலை... அப்பாவித் தொண்டனே நீ இப்போதே களத்தில் இறங்கு. உன் மனைவியின் கழுத்தில் மஞ்சள் கிழங்குதான் தாலியாகத் தொங்குகிறது. அதுவா உனக்குக் கவலை? தலைவன் டி.வி. ஆரம்பிக்கவும் கட்சியின் வைப்பகத்தை நிரப்பவும் சீக்கிரமே தங்கம் திரட்டு!
நல்ல தலைவன்... நல்ல தொண்டர்கள்!
- ச.மகிழ்வாணன்





+ comments + 3 comments
Nach matter thalaiva......
இந்த மியாவ் மியாவ் திருமாவை பற்றியெல்லாம் கட்டுரை எழுதாதீங்க சார்... திமுகவின் கிளைக் கட்சியைப் போல் செயல்படும் சிறுத்தைகளுக்கு அரசியல் ஒரு கேடா? காங்கிர்ஸை சகட்டுமேனிக்கு விமர்சிப்பார் திருமா... அடுத்த சில நாட்களிலேயே மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கியபடி போஸ் கொடுப்பார்; சோனியா காந்தியை வலிய சந்தித்து வாழ்த்து பெறுவார். இவருக்கு பொற்காசுகள் வேண்டுமென்றால் கலைஞர், சோனியா, ராஜபக்ஷே போன்றவர்களிடம் போய்க் கேட்க வேண்டியதுதானே... எதற்கு அப்பாவித் தொண்டர்களிடம் கேட்கிறார்.
சினிமாவில் நடிக்கப் போங்க குருமா... ஸாரி, திருமா!
அப்பு
Post a Comment