Latest Movie :

குடும்பப் போரில் சிக்கிய குஷ்பு!


ற்பு புகழ் குஷ்பு இப்போது தி.மு.க.வின் பிரதான பிரச்சாரப் பீரங்கி. தி.மு.க. நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் அம்மணிக்குத்தான் முதலிடம். சமீபத்தில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அருகே நின்றபடி குஷ்பு போராடிய அழகு அத்தனை மீடியாக்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்தது. மீடியாக்களின் கவனத்தைத் திருப்பும் முயற்சிகளில் குஷ்பு கைதேர்ந்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. தனசேகரன் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில், 'இடுப்பைக் கிள்ளிய தொண்டருக்கு அறைவிட்ட குஷ்பு' என மீடியாக்களில் செய்தி வந்ததை யாரும் மறக்க முடியுமா என்ன?


அடுத்தடுத்து மீடியாக்களின் கவனத்தைத் திருப்பி தி.மு.க.வின் முக்கிய புள்ளியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதுதான் குஷ்புக்கு இப்போது வினையாக அமைந்திருக்கிறது. கனிமொழிக்கும் குஷ்புக்கும் எப்போதுமே ஒத்துப்போகாது. அதனால்தான் சைதாப்பேட்டை போராட்டத்தில் தன்னுடன் கலந்துகொள்ளக் கூடாது என வெளிப்படையாகவே சொன்னார் கனிமொழி. 'குஷ்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட எனக்குக் கொடுப்பது இல்லை. பிரச்சாரக் குழுவின் நிர்வாகியாக இருக்கும் எனக்கே இந்தக் கதியா?" என புலம்பிய கயல்விழி போராட்டத்தில் கலந்துகொள்ளாமலே புறக்கணித்தார். 


அடுத்தபடியாய் தற்போது செல்வியின் கோபப் பார்வையும் குஷ்பு மீது திரும்பி இருக்கிறது. ''ஒவ்வொரு போராட்டத்திலும் ஏன் குஷ்புவை முன்னிறுத்துவது ஏன்? உணர்வுப்பூர்வமான போராட்டங்களைக்கூட அசிங்கப்படுத்தும் விதமாக இது தெரியவில்லையா? கூட்டத்துக்கு வரும் தொண்டன் தலைவரையும் தளபதியையும் பார்த்த காலம் போய் இப்போது குஷ்புவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். இதுதான் கட்சி வளரும் லட்சணமா?" என கருணாநிதியிடம் நேரடியாகவே குமுறிக் கொட்டியிருக்கிறார் செல்வி. 


இதற்கிடையில் ஸ்டாலின் மனைவி துர்காவின் ஆவேசமும் தனி... ''கனிமொழி, தயாநிதி, குஷ்பு மாதிரியான ஆட்களை எல்லாம் சென்னையின் முக்கிய இடங்களில் போராட வைத்துவிட்டு ஏன் கணவரை மட்டும் வெறும் நூறு பேருடன் கொளத்தூர் பகுதிக்கு அனுப்பியது ஏன்? குஷ்புக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட என் கணவருக்குக் கிடைத்துவிடக் கூடாது என தலைவர் நினைக்கிறாரா?" என கொந்தளிக்கிறார் துர்க்கா. 

கனிமொழி தொடங்கி துர்கா வரை வெறுப்பை சம்பாதிக்கத் தொடங்கியிருக்கும் குஷ்புக்கு இப்போதுதான் தி.மு.க. என்பது ஒரு கட்சி அல்ல... அது ஒரு குடும்பம் என்பது புரியத் தொடங்கி இருக்கிறது. 

பின்குறிப்பு: ஏற்கனவே காந்தி அழகிரியால் போனில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டவர் குஷ்பு. 'இனியும் என் கணவரோடு உன்னைப் பார்த்தால் தொலைச்சிடுவேன்!' என மிரட்டி குஷ்புவை கலங்கடித்தார் காந்தி அழகிரி. 


Share this article :

+ comments + 2 comments

நல்ல கட்டுரை. ஆனால், கலைஞரும் குஷ்புவும் டான்ஸ் ஆடுவது போல் படம் போட்டிருப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அரசியல் மற்றும் பொதுத்தள தகவல்களை சமீப காலமாக சிறப்பாகத் தரும் 'கும்பல்' இணையதளம் என்னதான் இருந்தாலும் ஒரு அரசியல் மூதறிஞரை குஷ்புவோடு ஆடுவது போல் படம் போட்டுக் காட்டியிருப்பது நியாயம்தானா? மற்ற இணையதளங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே கிடையாதா?

10 July 2012 at 07:07

spr katturai....... kalakkunga kumbal.com

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger