Latest Movie :

சசிகுமார் படத்தில் பாலா!


லைப்பைப் படித்ததும் இயக்குனர் பாலாவும் நடிக்கத் தயாராகிவிட்டதாக நினைக்க வேண்டாம். பெரும்பாலும் யாருடைய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும்  செல்லும் வழக்கம் இல்லாதவர் இயக்குனர் பாலா. ஆனாலும் தன் சிஷ்யப்பிள்ளை சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து யூனிட்டையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாலா. 'பரதேசி' ஷூட்டிங்கை 90 நாட்களில் முடித்து தன் வேகத்தை நிரூபித்திருக்கும் பாலா தேனி, பெரியகுளம், காரைக்குடி பகுதிகளில் ஒரே ஷெட்யூலில் 'சுந்தரபாண்டியன்' படம் தயாராவதை வியந்து பாராட்டி இருக்கிறார். ஒரு காட்சியை ஷூட் செய்யச் சொல்லி ஒரு ரசிகனைப்போல் நின்று பார்த்த பாலா, தன் சிஷ்யன் சசிகுமாரையும், இயக்குனர் பிரபாகரனையும் கைகுலுக்கி பாராட்டி இருக்கிறார். மானிட்டர் முன் அமர்ந்து இதர காட்சிகளையும் ஓடவிட்டு ரசித்த பாலா மொத்த யூனிட்டுக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். 

பாலா நேரில் வந்து வாழ்த்தியதை பெரிய ஆசீர்வாதமாக நினைக்கும் சசிகுமார், அதுகுறித்த செய்தியையோ புகைப்படத்தையோ வெளியிடாமல் ரகசியம் காக்கிறார். 

எந்த மீடியாவுக்கும் கிடைக்காத அந்த ஆச்சரிய புகைப்படத்தை நாம் தவறவிடுவோமா என்ன? கும்பல் வாசகர்களின் ரசனைக்காக தீவிர தேடுதலுக்கு பிறகு, நம் கைவசம் வந்த அந்த புகைப்படம் இதோ... 


Share this article :

+ comments + 12 comments

குரு - சிஷ்யன் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? ஒருவரை ஒருவர் போட்டியாக நினைக்கும் காலகட்டத்தில் தன் உதவியாளனாக இருந்த சசிக்குமாரை பாலா ஸ்பாட்டுக்கே வந்து பாராட்டியிருப்பது சூப்பர். சுந்தரபாண்டியன் தூள் கிளப்பட்டும்!

26 July 2012 at 23:58

CONGRATS BALA & SASI... SUNDARAPANDIAN CINEMA POSTERS SIMPLY SPR. KEEP IT UP SASIKUMAR........

27 July 2012 at 03:02

Sasi mugaththil raththa kaayam........?

27 July 2012 at 07:52

சீமானின் திருமண செய்தியை முதல் முறையாக வெளியிட்டதும், பாலா - சசிக்குமார் சந்திப்பு புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்டதும் அசத்தல், சமீப காலமாகத்தான் கும்பல் இணையதளத்தை படிக்கிறேன். நுணுக்கமான கட்டுரைகளை முதல் ஆளாக வெளியிடுகின்றீர்கள். பாராட்டுக்கள்!

சுந்தரபாண்டியன் படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். சசியின் நடிப்புக்காகவே போராளி படத்தை பலமுறை பார்த்தவன் நான். சூப்பர் ஸ்டார்களுக்கு சவால் விடும் அளவுக்கு அற்புத நடிப்புத் திறமை காட்டுகிறார் சசிக்குமார். வன்முறை, வெட்டுக்குத்து, துரோகம் என நிஜத்தை பிரதிபலிப்பதாகச் சொல்லாமல், அட்டகாசமான காதல் நாயகனாக சசிக்குமார் நடிக்க வேண்டும்.

பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்... பாலாவின் சிஷ்யன் சசி என்பதை பலமுறை சசி நிரூபித்துவிட்டார்...

27 July 2012 at 19:10

சசிக்குமார் லக்ஷ்மி மேனன் இணைந்து கலக்கும் சுந்தரபாண்டியன் வெற்றி பெற வாழ்த்துகிறோம். பாலாவும் சசியும் இருக்கும் அபூர்வ புகைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றி. சுந்தரபாண்டியன் படத்தின் மற்ற புகைப்படங்களையும் வெளியிடுங்கள். படம் எப்போது வெளியாகிறது என்பது பற்றியும் விளக்கமாக எழுதலாமே...
பரந்தாமன்

Anonymous
27 July 2012 at 19:13

சசிக்குமார் தாடியை எடுத்தால் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருப்பார் என்பது என் யூகம். சசிக்குமார் கவனத்துக்கு இதைச் சொல்லுங்களேன்...
யாழினி, சென்னை

Anonymous
27 July 2012 at 23:58

சுப்ரமணியபுரம் வெற்றி பெற்ற அளவுக்கு அடுத்த வெற்றியை சசிகுமார் இன்னும் கொடுக்கவில்லை. முதல் வெற்றியின் பிரசித்திலேயே தான் அவர் இத்தனை நாட்கள் பயணிக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தை மிஞ்சக்கூடிய அளவுக்கு சுந்தரபாண்டியன் வெற்றியை கொடுக்கட்டும்!

28 July 2012 at 01:05

super hero sasikumar...

சசிக்குமாருக்கு திருமணமாகிவிட்டதா?

Anonymous
30 July 2012 at 06:21

பாலா, சசிக்குமார், அமீர் போன்றவர்களை புரிந்துகொள்ளவே முடியலைப்பா... எந்த நேரத்தில் என்ன பண்ணுவாங்கன்னே தெரியலை. பரதேசியும் சுந்தரபாண்டியனும் ஒரே நாளில் வரப்போகுதாமே...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger