ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக சினிமா என்ட்ரி கொடுத்த மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அடுத்த படத்துக்கான கதையைத் தீவிரமாகக் கேட்டு வருகிறார். அதில் அவர் விரும்பிக் கேட்பது அரசியல் சம்மந்தப்பட்ட கதைகள்தான். எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வரும் ஒரு இளைஞன் எப்படி தாக்குப் பிடித்து ஜெயிக்கிறான் என்கிற கதை உதயநிதியை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். மகனை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் எனத் துடியாய் துடிக்கும் துர்கா ஸ்டாலினுக்கும் இந்தக் கதை பிடித்து விட்டதாம். ஆனாலும், கதையில் நிறைய இடங்களில் திருத்தம் சொல்லி புதுமுக இயக்குனருக்கு அட்வைஸ் பண்ணி இருக்கிறார் துர்கா.
கிராமத்து வாலிபனாக இருந்தாலும், தண்ணி அடிப்பது போலவோ தம் அடிப்பது போலவோ மகனைக் காட்டக் கூடாது. கைலி, சாட்ஸ் அணிபவராகக் கட்டக் கூடாது. கிராமத்து உடையில் காட்ட வேண்டுமானால் வேஷ்டி சட்டையில்தான் காட்ட வேண்டும். கதாநாயகியுடன் மிக நெருக்கமான காட்சிகளை வைக்கக் கூடாது என பல கறார் கண்டிஷன்களை போட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
அதாவது, எம்.ஜி.ஆர் பாணியில் மகனை சினிமாவில் வளர்க்கும் தந்திரம் இது. அரசியல் களத்தில் நிலைபெற தனிப்பட்ட ஒழுக்கத்தில் சரியாக இருக்க வேண்டும் என நினைத்தவர் எம்.ஜி.ஆர். அதனாலேயே அவர் நடிக்கும் எந்தப் படத்திலும் தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, கற்பழிப்பு காட்சிகள் என தவறான எந்த விஷயங்களும் இடம்பெறாது. இப்போது அதே பாணியை உதயநிதி விஷயத்திலும் பாலோ பண்ண ஆரம்பித்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
நல்ல அம்மா!
- கும்பல்


+ comments + 4 comments
அரசியலுக்கு வந்தாலும் நிச்சயம் உதயநிதி ஒரு அடாவடி அரசியல்வாதியாக இருக்கமாட்டார்.. அவரால் நாலு பேருக்கு நல்லது நடக்குமோ இல்லயோ... எந்த தொந்தரவும் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
எம்.ஜி.ஆர். பாணி எதற்கு...? உங்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றுங்கள் உதயநிதி.
உதயனிதி எம்.ஜி.ஆர் வழியைப் பின்பற்றுவது மிகச் சரியானதே... அவருடைய தாத்தா கருணாநிதியின் வழியைப் பின்பற்றினால் அதோகதிதான்!
முக முத்துவை நடிகராக்க கலைஞர் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தார். ஆனால், அது பலிக்கவில்லை. பேரன் உதயநிதியாவது கலைஞரின் ஆசையை நிறைவேற்றட்டும்.
sper
Post a Comment