அம்சாவுக்கு ரிவிட்!
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் பதவிக்கு வந்த வைர விழா, லண்டனில் அதிவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பன்னாட்டுத் தலைவர்களும் பங்கேற்ற இந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அவரும் தோரணை குறையாத அதிபராக லண்டனுக்கு வந்தார். லண்டன் மால்பரோ ஹவுஸ் அரங்கில் ராணியை பாராட்டும் கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு உரையாற்ற ராஜபக்க்ஷே அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரை பேச அனுமதிக்கக் கூடாது என ஈழத் தமிழர்கள் அந்த அரங்கை சுற்றி ஆவேச கூச்சலிட்டனர்.
'கொலைகாரனின் பாராட்டு தேவையா...', 'மனித உருவ மிருகமே... இங்கிருந்து ஓடு', 'கொலைகாரனுடன் கூட்டா?' என ஆவேச வார்த்தைகளால் மக்கள் அர்ச்சனை பாட, ராஜபக்க்ஷேக்கு பதட்டமான மனநிலை உருவானது. கூட்டத்துக்குப் போனால் யாரும் தாக்கக்கூடும் என அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதனால், சிங்களக் கோடி கட்டாத காரில் அவர் பயணித்தார். அப்படியும் அவர் உரையாற்ற முடியாத சூழலே உருவானது. ஒருகட்டத்தில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரை உரையாற்ற வேண்டாம் என இங்கிலாந்து அரசு அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். இதனால், ராஜபக்க்ஷேக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற வந்தபோதும் இதே நிலைதான் ராஜபக்க்ஷேக்கு ஏற்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை தூதர் அம்சாதான் தற்போது நிலைமை மாறிவிட்டது. உங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் இருக்காது எனச் சொல்லி ராஜபக்க்ஷேவை தைரியப்படுத்தி அழைத்திருந்தாராம். ஈழத் தமிழர்களின் போராட்டத்தால் முகம் கறுத்துப்போன ராஜபக்க்ஷே அம்சாவை வசைமாறிப் போழிந்துவிட்டே கிளம்பினாராம்!
இதே இந்திய அரசாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்... சிகப்பு கம்பளம் விரித்து, பிரதமரும் ஜனாதிபதியும் கைகுலுக்கி, ராஜபோக விபச்சாரத்தை மன்னிக்க... ராஜபோக உபசாரத்தை நடத்தி இருப்பார்கள். சூடு சொரணை கொண்ட தமிழர்கள் வாழும் மண் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது லண்டன்!
- கும்பல்



Post a Comment