உறுதியானது கும்பல் செய்தி!
ராமஜெயம் கொலைக்கு காரணமான கொலையாளியை போலீஸ் நெருங்கிவிட்டதாகவும், மிக விரைவில் அவனை போலீஸ் கைது செய்யும் எனவும் நம் கும்பல் இணையதளத்தில் எழுதியிருந்தோம். போலீஸ் மற்றும் மீடியாக்கள் மத்தியிலேயே நம் செய்தி மறுக்கப்பட்ட நிலையில், 'குற்றவாளி போலீஸ் கஷ்டடியில் இருப்பது உண்மைதான்' என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கே.என்.நேரு. குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை தாடியை எடுக்க மாட்டேன் என சொல்லிவந்தார் நேரு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'உன் முகத்தை போட்டோவில் பார்க்கவே கஷ்டமா இருக்குய்யா... தயவுபண்ணி தாடியை எடுய்யா...' என சொன்னபோதும் நேரு தாடியை எடுக்கவில்லை. ஆனால், நேற்று திடீரென தாடியை எடுத்த நேரு தலைக்கும் மொட்டை அடித்துக்கொண்டார். போலீஸ் தரப்பில் இருந்துவந்த உறுதிகரமான செய்தியை வைத்தே அவர் மொட்டையடித்தாக சொல்கிறார்கள்.
பெண் சம்மந்தமான பின்னணிகளே கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படுவதால், அதனை வெளியிடுவது கொலையானவரை அசிங்கப்படுத்துவது போலாகிவிடும் என நினைக்கிறது போலீஸ். ராமஜெயத்துக்கு மிக நெருக்கமானவராகச் சொல்லப்படும் ஒரு வாலிபரைத்தான் தற்போது கஷ்டடியில் வைத்திருக்கிறது போலீஸ். உரிய முறையில் விசாரணை விவரங்கள் தயாரிக்கப்பட்டு, அவதூறு ஏற்படுத்தாத வகையில் இந்த வழக்கு முடிக்கப்படும் என்கிறார்கள்.

+ comments + 1 comments
Latest update pl. Daily and weekly news very poor.. pl update for trichy readers...
Post a Comment