சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த 'கோபம்' படம் பூஜைக்கு முன்னரே நின்றுவிட்டது. சீமானின் படத்தில் நடிப்பதாகக் கதைகேட்டு அவரைக் காக்க வைத்த விஜய் ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்படியிருக்க சீமானின் தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு ஏன் வந்தது என்பதுதானே உங்களின் கேள்வி...
காரியம் ஆகவேண்டும் என்றால் காலைப் பிடிக்கத் தயங்காதவர் விஜய். தமிழ் பற்றுக்காகவோ, ஈழ ஆர்வத்துக்காகவோ சீமானின் படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை. ஈழப் போர் பெரிதாக நடந்த நேரத்தில், அதை எதிர்த்து விஜய் பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை. இதனால், ஈழத் தமிழர்கள் விரவி வாழும் நாடுகளில் விஜய் படத்துக்கு அடிவாங்கும் நிலை. இதனை சரிசெய்ய முடியாமல் திண்டாடிய விஜய்க்கு தக்க ஐடியா சொன்னார் விஜயின் மனைவி சங்கீதா. இலங்கைத் தமிழச்சியான இவர், 'தற்போது ஈழத் தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் சீமான் தான். அதனால், அவரோடு நெருக்கம் காட்டினால்தான் உலகளாவிய தமிழர்களிடம் உங்களின் மதிப்பை சரிக்கட்ட முடியும்' எனச் சொன்னார். விஜய்யும் உடனே அதற்கு சம்மதித்து சீமானுடன் படம் பண்ணுவதாகப் பேசினார்.
பண ரீதியான நெருக்கடிகளில் தவிக்கும் சீமானுக்கு விஜய்யின் கால்ஷூட் அவசியமாகப்பட்டது. உடனே, இருவரும் கைகோர்த்து 'கோபம்' பட விவாதத்தில் இறங்கினர். இதற்கு பைனான்ஸ் செய்து அழுது தீர்த்தவர் கலைப்பலி... ஸாரி, கலைப்புலி தாணு.
பண ரீதியான நெருக்கடிகளில் தவிக்கும் சீமானுக்கு விஜய்யின் கால்ஷூட் அவசியமாகப்பட்டது. உடனே, இருவரும் கைகோர்த்து 'கோபம்' பட விவாதத்தில் இறங்கினர். இதற்கு பைனான்ஸ் செய்து அழுது தீர்த்தவர் கலைப்பலி... ஸாரி, கலைப்புலி தாணு.
இதற்கிடையில் தான் ஈழ விவகாரம் பிசுபிசுத்து குளறுபடியான நிலை உருவானது. 'அவன் துரோகி... இவன் துரோகி' எனத் தமிழகத் தலைவர்களே குடுமியைப் பிடித்து மோதிக்கொண்டனர். அதனால், அப்படியே தன் ட்ராக்கை மாற்றிக்கொண்டார் விஜய். அதன் பிறகு எத்தனையோ தடவை சீமான் அழைப்பு விடுத்தும் விஜய் திரும்பிப் பார்க்கவே இல்லை.
இப்போதுதான் திடுக் திருப்பம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தானே ஆட்சிக்கு வந்ததைப்போல் ஆடினார் விஜய்யின் அப்பா சந்திரசேகர். ஆனால், ஆட்டமெல்லாம் கொஞ்ச நாள்தான். விஜயகாந்த் சட்டமன்றத் தகராறை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இப்ராகிம் ராவுத்தர் கார்டனில் கால் வைத்த பிறகு சந்திரசேகருக்கு பீஸ் போய்விட்டது. அட்டாக் அமைப்பை தொடங்கி சந்திரசேகரை தூக்கி வீசிய ராவுத்தர், அடுத்தடுத்தும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார். இதனால், இதரத் தயாரிப்பாளர்கள் அனைவரும் இப்ராகிம் பின்னால் அணிவகுத்தனர். இதுதான் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் மிகுந்த உளைச்சலாக அமைந்துவிட்டது. இதனால், திரையுலகை சேர்ந்த செல்வாக்கு புள்ளிகள் பலரையும் சந்தித்து ஆதரவு திரட்டும் வேலைகளில் தீவிரமானார்கள் விஜய்யும் சந்திரசேகரும். அதன் முதல் கட்டமாகத்தான் சீமானுக்கு தூது விட்டிருக்கிறார் விஜய். இருவருக்கும் இடையே மீடியேட்டராக இருந்து கசந்த நட்பை இனிப்பாக்க துடிப்பது ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமாம். ஆனால், இதுநாள் வரை சீமான் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு மூலமாக சீமானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
அப்போது சீமான் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?
''நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். நான் ஒரு அறிவிப்பு வெளியிட்டால் விஜய்யோட போஸ்டரைக்கூட எங்க பசங்க விட்டு வைக்க மாட்டாங்க. தமிழ் நாட்டுல மட்டுமில்ல... உலகம் முழுக்க விஜய்யை விரட்டியடிக்கவும் நாங்க தயங்க மாட்டோம். அதனால, அந்தப் பையனை வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கச் சொல்லுங்க!"
நிஜப்புலியின் இந்த வார்த்தைகளில் கலைப்புலி என்ன ஆனதோ?!
- ஏ.ஆர். எம். தாஸ்


.jpg)
+ comments + 5 comments
ஆதாயத்துக்காக எதையும் செய்பவர்கள் தான் சினிமாக்காரர்கள். விஜய் மட்டும் இதில் வித்தியாசமானவரா என்ன? கடந்த ஆட்சியில் சன் டிவியோடு கூட்டணி போட்டு கல்லா கட்டிவிட்டு, கடைசி நேரத்தில் கழன்று கார்டன் பக்கம் வந்தார். அதிலும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்யாமல் பட்டும்படாமல் அமைதி காத்தார். ஆட்சி மாறியதும் கார்டனுக்கு கைகுலுக்க ஓடினார். இப்போது கார்டனுடனான கசப்பை சரிசெய்ய சீமானிடம் ஓடி வருகிறார். விஜய் இனிமேல் அரசியல்வாதி ஆகவேண்டியதில்லை. அல்ரெடி அவர் அரசியல்வாதிதான். சீமானின் ஆவேச வார்த்தைகள் விஜய்க்கு சொல்லப்பட்டதா இல்லையா?
பொய் சொன்னாலும் பொருந்துற மாதரி சொல்லணும்
நல்ல கட்டுரை... சீமான் அண்ணா, நீங்கள் இனியும் நடிகர்களை நம்பாதீர்கள். நீங்களும் சினிமாவுலகில் இருந்து வந்தவர்தான். ஈழத்துக்கான போராட்டங்களில் உங்களுக்காக எந்த நடிகனும் நிற்க மாட்டார்கள்.
vijaykum evalavu fans irukanganu seemanku therium athen vijay kuda film panna vantharu, apparm vijay fans powera nangalum kattuvom.
intha kathai verai engavathu poi sol padamavathu odattum.nalla kathai eluthi irrukeenga..................
Post a Comment