Latest Movie :

அடுத்த என்ட்ரீ அனுராதா!





"இனி ஒட்டுமில்லை உறவுமில்லை..."  என உதிர்த்த வார்த்தைகள் மறந்துபோய், உயிர்த்தோழி சசிகலாவை கார்டனுக்கு வரவழைத்து, ஆரத்தி எடுத்து அன்பைக் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா. "இப்புடியாகும்னு தெரியும்ல..." என தமிழகம் தன்னைத்தானே தேற்றிக்கொண்டது தனிக்கதை! 

ஆனால், அடுத்து அம்மையார் ஜெயலலிதா அறிவித்தது தான் சூப்பர் அதிரடி. ''தோழி சசிகலாவுக்கு மட்டும்தான் மன்னிப்பு... மற்றபடி அவருடைய உறவுக்காரர்கள் மீது எவ்வித கழிவிரக்கமும் காட்டப்படாது" என்றார் ஜெயலலிதா. சொன்னது மட்டுமல்ல... சசிகலாவை கார்டனுக்குள் அழைத்தாலும், அவருடைய கணவர் நடராசன் மீதும், தம்பி திவாகரன் மீதும் வழக்குகளை தொடர்ந்து பாய்ச்ச வைத்தார். 'இந்தம்மா சொல்றதை கேட்கிறதா இல்லையான்னே தெரியலையே...' என திருச்சி மண்டல போலீஸ் திண்டாடிப் போனது. 


இதற்கிடையில் தான் இன்னொரு அதிரடி... சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் கார்டனுக்குள் கால் வைத்தார். சசிகலாவுக்கும் இளவரசிக்கும் சண்டை எனக் கிளம்பிய வதந்திகள் இதில் தவிடுபொடியாகின. இளவரசியைப் பகைத்துக்கொண்ட அதிகாரிகளும் விக்கித்துப் போனார்கள்.

           
''ஸ்வீட் கொடுத்தவங்களை எல்லாம் 
சுளுக்கெடுத்தாதான் சரிப்படும்கா..." 

அடுத்த திருப்பமாக டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா கார்டனை நோக்கி கிளம்ப இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்புதல் வாங்கப்பட்டு விட்டதாகவும், வரும் வாரத்திலேயே அவர் கார்டனில் தென்படுவார் என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள். கார்டனுக்கு வருவது மட்டுமல்ல... பழையபடியே ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்பையும் அனுராதா ஏற்க இருக்கிறார். 

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?!

Share this article :

+ comments + 4 comments

6 May 2012 at 06:19

அனுராதாவுக்கு அடுத்தபடியாய் வரப்போவது யாராம்? என்றைக்கு சசிகலா அங்கே அடியெடுத்து வைத்தாரோ... அன்றைக்கே அனைவரும் ஐக்கியமாகிவிட்டார்கள் என்பதுதானே உண்மை.

Anonymous
6 May 2012 at 13:31

ivangalukku vera velaiyae illaiya

7 May 2012 at 10:55

palaiya dance pukazh anuradhannu ninaichittom!

7 May 2012 at 20:53

Ithu katchiya companya?
VENMANI

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger