குடுமிப்பிடிகள் உலகறிந்தவை.
இதற்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் குடும்பம். முலாயம் சிங் யாதவ்வின் மகன்தான் அகிலேஷ். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அகிலேஷ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேல்சபை உறுப்பினராகி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அவர் ராஜினாமா செய்த கன்னோஜ் தொகுதிக்கு வரும் 24 ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருக்க, அகிலேஷ் தன் மனைவி டிம்பிள் யாதவ்வையே நிறுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார்.
அகிலேஷ் யாதவ்வின் இளம் மனைவியான டிம்பிள் உ.பி. முழுக்க மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அகிலேஷை சர்வ வல்லமை படைத்த தலைவராக உருமாற்றி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் கடந்த தேர்தலில் பயணிக்க வைத்தவர் டிம்பிள் தான். ஆனாலும், சீனியர் நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்க, அவர்களைத் தவிர்த்துவிட்டு டிம்பிளை நிறுத்தி இருப்பது கட்சிக்குள் கலவரக் குரலைக் கிளப்பி இருக்கிறது. இதனால் அகிலேஷ் மனம் மாறுவார் என பலரும் நினைக்க கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் மூலமாக டிம்பிள் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்ய வைத்திருக்கிறார் அகிலேஷ்.
குடும்ப அரசியல் நடத்தியவர்களின் கதி என்னானது என்பது அகிலேஷுக்கு தெரியாது போலும்!


Post a Comment