நல்ல அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொள்ள தவறுவதில் தமிழக அரசியல்வாதிகளுக்கு அவார்டு கொடுக்கலாம். வளைந்து நெளிந்து போகும் அதிகாரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு என்கிற நிலைதான் எப்போதும் தமிழகத்தில் நீடிக்கும். எப்போதாவது அத்தி பூத்தாற்போல சில அதிசயங்கள் நடந்தால்தான் உண்டு. அப்படி ஒரு அதிசயம்தான் ஜெ.ராதாகிருஷ்ணன் மறுபடியும் தமிழகத்துக்கு வந்திருப்பது!
ராதாகிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. கடலோர மாவட்டங்களை சுனாமி சுழற்றி அடித்தபோது ஆபத்பாந்தவனாய் கண்ணீர் துடைத்தவர். அதற்கு முன்னரே கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் தீ விபத்தில் பலியானபோது தத்தளித்த பெற்றோரின் பெருவழி துடைத்தவர். 'அய்யா... எங்க பொண்ணோட சடலத்தைக்கூட காணலையா... எங்க பொண்ணை காட்டாட்டி இந்த இடத்திலேயே நாங்களும் செத்திடுவோம்' என பதறி அழுத பெற்றோரிடம் தன் குழந்தையை ஒப்படைத்து ஆறுதல் சொன்னவர்.
அரசியல் பந்தாட்டங்களுக்கு ஆளாகிவிடமால் மத்தியப் பணிக்கு தன்னை மாற்றிக்கொண்ட ராதாகிருஷ்ணன் இப்போது மீண்டும் தமிழகத்தின் திட்ட அமுலாக்கத் துறையின் செயலராகத் திரும்பி இருக்கிறார். சிறப்புத் திட்டங்களின் மூலமாகவே தமிழகத்தை தன்னிறைவு கொண்ட மாநிலமாக்க முடியும் என முதல்வர் உறுதியாக நம்புகிறார். அதற்காகவே பிரத்யேக கவனத்தோடு அழைத்து வரப்பட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் மனைவி கிருத்திகாவும் மக்கள் பணியில் அக்கறை குறையாதவர்.
சுனாமி நாயகனை வரவேற்பதில் கும்பல் இணையதளம் பெருமகிழ்வு கொள்கிறது!
- கும்பல் ஆசிரியர் குழு



+ comments + 5 comments
வெல்கம் மிஸ்டர் ராதாகிருஷ்ணன்... சுனாமி காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டு பணியாற்றியவர் நீங்கள். தங்களின் பணி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும்பேறு. நீவீர் வாழிய பல்லாண்டு!
தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பணியாற்றிய போதும், சென்னையில் அப்போதைய மேயர் மு.க.ஸ்டாலினுக்குத் துணையாக ஆக்கப்பூர்வமாக செயலாற்றிய போதும் ராதாகிருஷ்ணன் தன் தனித்தன்மையை நிரூபித்தவர். இவரைப் போன்ற அதிகாரிகள்தான் தமிழகத்துக்கு அவசியமானவர்கள். முதல்வர் ஜெயலலிதா நிகழ்த்தியிருக்கும் சாதனையாகவே இதனைச் சொல்லலாம். அதிகாரிகளைப் பந்தாடுவதில் மட்டுமல்ல... தகுதியான அதிகாரிகளை தக்க பதவிகளில் அமர்த்துவதிலும் அம்மா அம்மாதான்!
திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. அவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் எப்படி ஒத்துவரப் போகிறதோ தெரியவில்லை. அமைச்சரைச் சுற்றி இருக்கும் வெட்டி கும்பல்களை விரட்டுவதுதான் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். செய்ய வேண்டிய முதல் வேலை. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்பவர். அதனால், இந்த இருவருடைய கூட்டணியும் சிறக்கும் என நம்புகிறேன்!
வருக வருக சுனாமி நாயகனே வருக!
சின்னக் குழந்தையைப் போல் சிரிப்பும் சீரிய பணியும் கொண்ட வல்லவனே வருக. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். போன்ற நியாயமான அதிகாரிகளைக் கௌரவிப்பதன் மூலமாக 'கும்பல்' இணையதளம் மிகுந்த சமூகப் பணியாற்றுகிறது என்றால் மிகையில்லை!
WELCOME MR.NERMAI!
Post a Comment