கும்பல் சொன்னது அப்படியே பலித்தது...
பழிவாங்கும் பட்டியலில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலரில் திறமை படைத்த சிலர் மீண்டும் நல்ல பதவிகளுக்கு வர இருக்கிறார்கள் என்றும், அதில் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சீக்கிரமே நல்ல பதவி கிடைக்க இருக்கிறது என்பதையும் சமீபத்தில் எழுதி இருந்தோம்.
நாம் சொல்லியிருந்தபடியே கோவை கமிஷனராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் விஸ்வநாதன். இது மட்டுமல்லாது போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வும், இடமாற்றமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ள சைலேந்திரபாபு கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். மதுரை கமிஷனராக அதிரடி கிளப்பிய கண்ணப்பன் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும், அவருக்கு மாற்றாக சஞ்சய் மாத்தூர் மதுரை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- கும்பல்

+ comments + 1 comments
Kumudamum, vikatanum thaan ippadi thangalai thaangale sorinthu kollum. Antha varisaiyil kumbaluma? Kodumaita samy........
Post a Comment