Latest Movie :

எட்டு போட்டால் எட்டாது சக்கரை


          'எட்டு' போட்டால், வாகனம் ஓட்ட 'உரிமம்' கிடைக்கும் என்பதுதான் நமக்கு தெரியும். அனால், 'எட்டு' வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கியம்  கிடைக்கும் என்கிறார் யோகா ஆசிரியரான சண்முகம். 

    சென்னை ராயபுரம் அண்ணா பூங்காவில் மாலை நேரத்தில் சென்றால், தரையில் என்னை எழுதி, அதன் மீது தொடர்ந்து நடந்து செல்வதை பார்க்கலாம். 

சர்க்கரை தீரும்

       இது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டபோது 'எட்டு' வடிவில் நடந்து செல்வதால், சர்க்கரை வியாதியில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவதாகவும், மூட்டு வலி குணமடைவதாகவும் கூறினர்.

 'எட்டு' வடிவ நடை பயிற்சியை  வழங்கி வரும் வண்ணாரபேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது  :


சித்தர்  கால வைத்தியம் 

      'எட்டு' வடிவ நடை பயிற்சியை, புதுச்சேரியில் உள்ள இயற்க்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் கற்று கொண்டேன். 'எட்டு' போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாக தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்க்கை வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று. சென்னையில் 20 ஆண்டுகளாக இந்த பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் 'எட்டு' நடை போடுகின்றனர்.

பயிற்சி முறை 

            ஒரு அறையில் மல்லது வெட்ட வெளியில் கிழக்கு மேற்காக கோடு
வரைந்து, 10  அடியில் வடக்கு தெற்காக 'எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல் தொடர்ந்து 10  முதல் 15 நிமிடம் வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கியோ நடக்க வேண்டும். பயிற்சியின் முடிவில், உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்  காற்றையும்  உணரலாம். பின் இடைவெளி விட்டு மீண்டும் 15  நிமிட நடைபயிற்சியைத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம். 

குதிகால் வரை 

              இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. குளிர்ச்சியால் எற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். கண் பார்வை மற்றும் செவி கேட்ட்பு திறன் அதிகரிக்கும், உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. குடலிறக்க நோயும் இதனால் குணமாகும். ரத்த அழுத்தமும் குறையும். 

        'எட்டு' நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வதால் மூட்டு வலியும். ரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் சர்க்கரை வியாதியில்  இருந்தும் விடுபடலாம். மற்ற நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியில் சிறுநீரகத்தின் 'பாயிண்ட்' என்று சொல்லப்படும் குதிகால், அதிக பயன் பெறுகிறது. மன அழுத்தமும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு 

               எட்டு நடை பயிற்சி குறித்து நாகேந்திரன் கூறும்போது, "60 வயதான எனக்கு, இந்த பயிற்சியை மேற்கொண்ட பிறகு, பட படைப்பு குறைந்துள்ளது ;
சர்க்கரையும் படி படியாக குறைந்து வருகிறது என்றார்.

பள்ளி தலைமையாசிரியர் மனோன்மணி, "இந்த படிர்சியை கடந்த ஆறு மாதமாக செய்து வர்கிரேன். இதனால், எனதி ஊளை சதை வெகுவாகக் குறைந்துள்ளது. கண்களுக்கு நல்ல படிற்சியாக உள்ளது," என்றார்.


888  மாதம் வாழ '888'

    888 மாதங்கள் அதாவது 74 வயது வரை, நோயின்றி வாழ, மூன்று 888  ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்கின்றனர் 'எட்டு' பயிற்சியாளர்கள். முதலில், தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். இரண்டாவதாக, ஒரு நாளைக்கு  எட்டு கி.மீ., நடைபயிற்சி செய்ய வேண்டும். மூன்றாவதாக, தினமும் எட்டு மணி நேர உறக்கம். இவற்றை முறைப்படி செய்தால் நோய் எட்ட நிற்கும் என்று பயிற்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். 
  

- நன்றி தினமலர் 
Share this article :

+ comments + 4 comments

30 April 2012 at 06:25

Exelent matter. Keep it up kumbal.

Anonymous
6 May 2012 at 00:27

nice exercise kept up all.............

9 May 2012 at 22:10

8 kula valki eruku ramaya

16 June 2017 at 00:48

very useful tips. Thanks.v.Kumarakurubaran. Thiruvalaputhur.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger