சங்கரன்கோவில் இடைத்தேர்தலை வெற்றிகரமாக நிகழ்த்தி உற்சாகக் களிப்பில் இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சசிகலாவைப் பிரிந்ததால் எவ்வித சரிவும் இல்லை என்பதை முக்குலத்து மக்களின் செல்வாக்குப் பெற்ற சங்கரன்கோவிலில் நிரூபித்து விட்டதால் ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
இடைத்தேர்தலுக்கு முன்னரே சில அமைச்சர்களின் செயல்பாடு பிடிக்காமல் கடும் கோபத்திலிருந்த ஜெயலலிதா அவர்ககளைக் கூப்பிட்டுக் கண்டிக்கவும் செய்தார். சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களையும் அதிரடியாகத் தூக்கி அடித்தார். ஆனாலும், உயர் கல்வித் துறை தொடங்கி திட்ட அமலாக்கத் துறை வரையிலான பல துறைகளின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லையாம். அதனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு உடனடியாக அமைச்சரவை மாற்றத்தை முதல்வர் அறிவிக்கவிருக்கிறார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்படலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். அவர்களுக்கு மாற்றாக டாக்டர் விஜயபாஸ்கர், பாபநாசம் துரைக்கண்ணு, தி.நகர் கலைராஜன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனப் பலமான பேச்சிருக்கிறது.
அதேபோல் அதிகாரிகள் வட்டத்திலும் அதிரடி மாற்றங்கள் உறுதியாக இருக்கும் என்கிறார்கள். தி.மு.க. ஆதரவு அதிகாரிகளாக மீடியாக்களால் தவறாக சித்தரிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட், ஏ.கே.விஸ்வநாதன், ரவி உள்ளிட்டவர்களை சட்டம் ஒழுங்குக்குப் பணிக்குப் பயன்படுத்தி செயின் பறிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரவும் தீவிரமான யோசனையில் இருக்கிறார் முதல்வர்.
நல்லது நடந்தால் சரி!
- கும்பல்



+ comments + 6 comments
சமீப காலமாகவே முதல்வரின் ஸ்திரத்தன்மை தெளிவாக தெரிகிறது. கூடங்குளம் தொடங்கி இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரை முதல்வர் மிகுந்த உறுதியோடு உரிய நடவடிக்கைகளை எடுக்கிறார். அப்படியிருக்கையில், மறுபடியும் அமைச்சர்களை பந்தாடுவது சரியாக இருக்குமா? அமைச்சர்களை மாற்றும் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு அதிகாரிகள் மூலமாக அவர்களுக்கு உரிய பக்குவத்தையும் தெளிவையும் முதல்வர் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் அதிகாரிகளை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் தக்க தகுதிகளின் அடிப்படையில் பணியிடங்களை வழங்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகள் ஒருபோதும் இந்த அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தாது. எனக்கு தெரிந்தமட்டில் முதல்வருக்கு தெரியாமல் அதிகாரிகளே தங்களுக்கு ஆகாத அதிகாரிகளை பழிவாங்குவதாகத் தான் நினைக்கிறேன்., முதல்வரம்மா இதனையும் கண்டித்துக் களைய வேண்டும்!
அடப் போங்கப்பா... அம்மா ஆட்சியில் அமைச்சர்களும் அதிகாரிகளும் தூக்கி அடிக்கப்படவில்லையென்றால் தான் செய்தி... குப்பையில் கிடப்பவர்கள் கோபுரம் ஏறுவதும் கோபுரத்தில் ஜொலிப்பவர்கள் குப்பைக்கு வீசப்படுவதும் அம்மா ஆட்சியில் சகஜம் தானே...
ammannaa chummaa illada... avanga illaina yaarum illataa.. ippatikku amaicharkalum athikaarikalum!
கூடங்குளம் விவகாரத்தில் அம்மா மொத்த தமிழகத்தையும் ஏமாற்றி விட்டார் என்பது தான் உண்மை. மத்தியரசின் மிரட்டலுக்கு அவரும் படிந்து விட்டாரோ என்னவோ... இதெல்லாம் போதாது என அமைச்சரைவை மாற்றம் வேறா? அடக்கொடுமையே சாமிகளா..........
ippave kannakattuthe
Ministers paavam!!!!!!
Post a Comment