Latest Movie :

கடைக்குட்டிப் புலிக்கு வீர வணக்கம்!

கொன்றுபோட்ட ஆயுதமே... 
எங்கள் வீரக்கொழுந்தை
தின்று தீர்த்த ஆயுதமே...

எதற்கடா எட்டுத் தோட்டாக்களை எய்தீர்கள்? 
ஒற்றைத் தோட்டாவால் எங்களின் பச்சை சிசுவை
பலிகொள்ள முடியவில்லையா உங்களால்? 
பெற்ற வயிறு கொதிக்குதடா...
உற்ற உயிராய் துடிக்குதடா...
நட்ட நாற்றை சிதைத்தெறிந்த நாய்களை 
வெட்ட வீரம் முளைக்குதடா...


ஒரு சிசுவைக் கொல்லத்தான் 
சிங்கள் ராணுவமா? 
பசுவை சுட்டுத்தான் 
பயிற்சி எடுத்தீர்களா?

விரல் வளரா பிள்ளையைக் கொன்றதற்கா
மெடல் மெடலாய் குத்திக் கொள்கிறீர்கள்? 
புலியின் கருவறையைப் புதைத்த பாவிகளே... வலியின் கொடூரத்தை அறிவீர்கள் சீக்கிரமே... 


ஒரு பிஞ்சைக் கொல்லத்தான் பெரும்படையா?
நஞ்சைத் தின்று சாகுங்கள்... 
இதுதான் போரின் நடைமுறையா? 

பாலச்சந்திரனை மட்டும் அல்ல... 
காலச் சக்கரத்தின் கடைசி குழந்தையையும் கொன்று போடுங்கள்! 
காரணம்... 
குழந்தைகளுக்குகூட பயப்படும் கோழைகள் நீங்கள்!

ஈழ வேந்தன்,கனடா
Share this article :

+ comments + 3 comments

22 March 2012 at 11:07

இனி அழக் கண்ணீர் இல்லை... இன்றைக்கும் உலக வல்லூறு தேசங்களும், இதயமற்ற இந்திய தேசமும் தமிழன் புதைக்கப்பட்ட இனக்கொடூரத்தை மறைக்கப் பார்க்கின்றன. எல்லாம் நடக்கட்டும்... எத்தனை காலங்கள் வேண்டுமானாலும் தொடரட்டும். அடி மனதின் வேதனையோடு அடிபட்ட புலிகளாய் தமிழ்க் குழந்தைகள் காத்திருக்கிறார்கள்.

23 March 2012 at 02:56

ஐயகோ பாவம்... இந்தச் சின்னக் குழந்தையைக் கொல்ல அந்தப் பாவிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ... நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கடா பாவிகளா... வெற்றுத் தீர்மானத்தை இயற்றி கண்துடைப்பு நடத்தும் அமெரிக்காவுக்கும் விரைவிலேயே அழிவுகாலம் வரும்.

15 June 2012 at 08:33

Thamizha... Idhu unaku thervu kaalam..... Idhu pondra pachai kuzhandhaigalai irakkamindri kollum paavigalai arindhu... unarndhu... therndhu vidu...

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. ENTERTAINMENT - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger