பிப்ரவரி 24 ம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறந்த தினம். அதற்கு ஒருநாள் முன்பாகவே துப்பாக்கி வெடித்து முதல்வருக்குப் பிறந்த நாள் பரிசு கொடுத்திருக்கிறார்கள் சென்னை போலீஸார். போலீஸாரின் இந்த அதிரடி சென்னையில் அமைதியை விரும்பும் சாதாரண மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. பீகாரில் இருந்து துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு தமிழகத்திற்கு கிளம்பலாம் என நினைக்கிற கொள்ளையர்களை இந்த என்கவுண்டர் நிச்சயம் யோசிக்க வைக்கும்!
போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் சார்... சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி சார்... உங்களுக்கும் உங்கள் போலீசாருக்கும் சென்னை நகர மக்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவருமே மனதிற்குள் பெரிய சல்யூட் அடிக்கிறார்கள். இது போலீஸார் கடமைக்காக அடிக்கும் சல்யூட்டை போன்றது அல்ல. இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி, பாராட்டுக்களைத் தெரிவிக்கும் சல்யூட் ஆகும்.
+ comments + 1 comments
கும்பல் அறிவித்தது போல ஊடகங்களின் ஜால்ரா இனிதே ஆரம்பம்...
Post a Comment