திருச்சி சிறையில் நடராஜனுக்கு நேர்ந்த அவமானம்!
சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் கைதான விவகாரம் தமிழகத்தில் பெரிதான பரபரப்பையோ பதட்டத்தையோ ஏற்படுத்தவில்லை. பத்தோடு பதினோன்றாகத்தான் நடராஜன் கைது அமைந்துவிட்டது. ஆனால், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடராஜன் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் அவருடைய ஆதரவாளர்களை கதற வைத்திருக்கிறது.
கைது, மருத்துவப் பரிசோதனை, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் என வழக்கமான அத்தனை சம்பிரதாயங்களும் முறைப்படி நடந்த நிலையில், திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடராஜனுக்கு அங்கே தான் அவமான டார்ச்சர் ஆரம்பித்திருக்கிறது.
சிறைக்குக் கொண்டுவரப்படும் கைதிகளின் உடைகளைக் களைந்து பரிசோதனை நடத்தப்படுவது வழக்கம் தான். ஆனாலும், அரசியல் மற்றும் பொதுவாழ்க்கை பிரமுகர்களுக்கு பெரும்பாலும் இப்படிப்பட்ட பரிசோதனைகள் நடத்தப்படுவது கிடையாது. இதேபோல் தன்னையும் பரிசோதனை செய்யாமல் அனுப்பிவிடுவார்கள் என நம்பி, கேஷுவலாக உள்ளே போனார் நடராஜன். ஆனால், அங்கே இருந்த போலீஸ் தரப்பினர் அவரை மறித்திருக்கிறார்கள்.
உடலில் ஒட்டுத்துணி இல்லாதபடி நடராஜன் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு இருக்கிறார். ''ஏன் இப்படிப் பண்றிங்க? யார் இப்படி எல்லாம் பண்ணச் சொன்னது?" என அலறியிருக்கிறார் நடராஜன். ''யாரும் உங்களை செக் பண்ணச் சொல்லலை சார்... ஆனாலும், நீங்க தற்கொலைக்கு முயல வாய்ப்பு இருக்கிறதா தகவல் சொன்னாங்க. அதனால தான் இந்தப் பரிசோதனை" என போலீஸ் சொல்ல, நொந்து நூலாகியிருக்கிறார் நடராஜன். ''நான் எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும்? இந்தம்மாவை ஆட்சிக்கு கொண்டு வந்ததுக்கா? இந்தம்மாவை காப்பாத்தா என் மனைவி அங்கே படாதபாடு படுறா... இங்கே என்னைய நிர்வாணமா நிக்க வச்சு அவமானம் பண்றீங்க... நடராஜன் கூனிக்குறுகி நின்னாரும்மான்னு அந்தம்மாவுக்கு தகவல் எழுதி அனுப்புங்க... ரொம்ப சந்தோசப்படுவாங்க..." என்றபோது நடராஜன் கண்கலங்கி விட்டாராம்.
நடராஜன் கைது விவகாரம் நிர்வாண சித்திரவதை அளவுக்கு மாறி இருக்கும் தகவல் இப்போதுதான் வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது. வக்கீல் மற்றும் நடராஜனுக்கு மிக நெருக்கமானவர்களிடம் பேசி உறுதி செய்த பின்னரே இந்தத் தகவலை அம்பலத்துக்கு கொண்டுவருகிறது 'கும்பல்'!
- கும்பல்


+ comments + 2 comments
கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன்... தி.மு.க.வை அழிக்காமல் விடமாட்டேன் என அலைந்தவருக்கு இந்த நிலை தேவைதான். தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு இவரை விட வேறு உதாரணமே இருக்க முடியாது. இன்னும் நல்லா அனுபவிக்கட்டும்.
veri pidicha mirugam jaya
Post a Comment